பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

207


திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் 2O7 . தம் உடைமை வைத்து இழக்கும் என்றதால் ஒருசேர என்று கூற வேண்டியதாயிற்று. தம் உடைமைப் பொருளை வைத்து இழப்பது பற்றி ஆசிரியர் பல இடங்களிலும் கூறுவார்.

‘கொடுப்பது உம் துய்ப்பதுரஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடிஉண் டாயினும் இல் - #005 ‘ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று) ஈதல் இயல்பிலா தான்’ - 1006 ‘அன்பொரீஇத் தற்செற்று அறம்நோக்காது) ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - 1009 ‘கரவுள்ளம் உள்ளது.உம் இன்றிக் கெடும்’ - - 1069

- சான்றோர் பிறரும் அவ்வாறு உரைப்பர்: ‘வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம். . . . .

நாய்பெற்ற தெங்கம் பழம்’ - பழமொழி:151 (தெங்கம் பழம் - தேங்காய்) ‘படரும் பிறப்பிற்கொன் றியார் பொருளைத் தொடரும்தம் பற்றினால் வைத்திறப் பாரே அடரும் பொழுதின்கண் இட்டுக் குடரொழிய

மீவேலி போக்கு பவர்’ - பழமொழி:379 ‘ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்’ - கொன்றை:4 “வள்ளண்மை இல்லாதான் செல்வத்தின் மற்றையோன் நல்குரவே போலும் நனிநல்ல - கொன்னே அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று பலரால் இகழப் படான்’ - நீதிநெறி. 66 ‘பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்கு ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்’ - நல்வழி:22 ‘இன்னல் தரும்பொருளை ஈட்டுதலும் துன்பமே பின்னதனைப் பேணுதலும் துன்பமே - அன்னது

- அழித்தலும் துன்பமே அந்தோ பிறர்பால்