பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

223


திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் 223

சகரத் தொடக்கம் ககரத் தொடக்கமாக மாறித் திரவிட மொழிகளில் வழங்கும். அதேபோல் ககரமும் ‘சகரமாக அம்மொழிகளில் மாறும்.

- செம்பு கெம்பு:தெலு சேரலம் கேரளம் (மலை) கை செய் (தெலு)

. எனவே, கீர்த்தி என்பது சீர்த்தியின் திரவிடத் திரிபு. . இருப்பினும் தமிழ் வழக்காக வழங்கி வருகிறது.

இன்னும் கீர்த்தி என்பது சமற் கிருதத்தில் ‘கியாதி என்றும் இடைத்

திரிபுற்றும் வழங்குகிறது. ‘கியாதி எனினும் புகழே. . எனவே, கீர்த்தி என்னும் சொற்கு நூல் வழக்குக் காட்டப் பெறவில்லை. ‘மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது உலகவழக்கு நேர்த்தி யுள்ளவன் கீர்த்தி பெறுவான் - சொலவடை 6) இசை வழக்கு இசை பெற்றவன் இசைபட வாழ்ந்தான்.

விளக்கம்: இசை பெரும்புகழ், இசையொடு பாடப்பெறும் புகழ். பெரும்பாலும் சமய குரவர்களின் புகழும் கடவுளர்களின் பெருமையும் பண்ணொடு இசைக்கப் பெறுதலின் இசை, புகழாயிற்று.

- கடவுளர் இலக்கியமாகிய பரிபாடல் பாக்கள் இசை வகுத்துப் பாடப்

பெற்றன. அவற்றுக்குப் பண்குறிப்பும் தரப்பெற்றுள்ளன.

- பெரும்பாலும் சமயத்தலைவர்களின் புகழும் உலகெங்கும் அனைத்து

மொழிகளிலும் இசை வடிவிலேயே உள்ளதும் கருதத் தக்கது.

- இந்நூலுள்ளும் இசை என்னும் சொல் வரும் ஆறு இடங்களிலும் புகழ்

என்னும் பொருளிலேயே வருகின்றது. . . z

‘இசைபட வாழ்தல்’ - 23 ‘இசையென்னும் எச்சம்’ - 238 ‘இசையிலா யாக்கை’ - 239 ‘இசையொழிய வாழ்வாரே’ . - 240 “சுழலும் இசை வேண்டி’ - 777 இசை வேண்டா ஆடவர் - 1003

- இனி, கழக நூல்கள் சிலவற்றுள் வரும் எடுத்துக் காட்டுகள்:

இசைநலங் கிள்ளி - நற்:141:9 பேரிசைமுள்ளுர் - - நற்:170:6