பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

அ-2-20 புகழ் -24


256 - அ-2-20 புகழ் 24 பொழிப்புரை அவரவர் வாழ்க்கைக்குப் பின்னர் எஞ்சி நிற்கின்ற புகழைப் பெறாவிட்டால், இவ்வுலகில் வந்து மக்களாய்ப் பிறந்து வாழ்ந்து மறைந்தார்க்கும், வாழ்ந்துகொண்டிருப்பார்க்கும் - எல்லாம் இகழ்ச்சியே ஆகும் என்பர் சான்றோர்.

சில விளக்கக் குறிப்புகள்:

இசை என்னும் எச்சம் பெறாவிடின்: அவரவர் வாழ்க்கைக்குப் பின்னர் எஞ்சி நிற்கின்ற புகழைப் பெறாவிட்டால், இசையென்னும் எச்சம் மிகுந்தபுகழ் என்னும் வாழ்க்கையின் எச்சம். எச்சம் - எஞ்சியிருப்பது. ஒருவன் வாழ்க்கைக்குப் பின் எஞ்சியிருப்பது, அவன் பிள்ளைகள், அறிவு,

செல்வம், புகழ், பழி என்பவை எல்லாமும் எச்சமே. . இருப்பினும் பிற எச்சங்கள் அவ்வவ் வளவில் நின்று, காலப்போக்கில்

இல்லாமற் போவன. - ஆனால், புகழ் எச்சம் மட்டும் இவ்வுலகம் உள்ளவும், மக்கள் மாட்டுநின்று அவர் சிறப்பைப் பிறர்க்கு உணர்த்திக் கொண்டிருக்கும். ஆகையால், புகழ் எச்சமே பிற அனைத்திலும் சிறப்பு வாய்ந்ததாகும். - எனவேதான் இசை என்னும் எச்சம் என்றார். - அவ் வெச்சம் என்னும் புகழ் ஈகையால், அறிவால், வீரத்தால், “. பிற

சிறப்புச் செயல்களால் வருவது. “. - பெறாவிடின் முயன்று பெறாவிட்டால். - பிள்ளைகள், அறிவு, செல்வம், வீரம் முதலிய அனைத்தும் பெறுவனவே எனினும், ஒருவன் புகழைப் பெறும் அளவிற்கு நற்செயலைச் செய்தல்வேண்டும் என்றார். - பெறாஅ என்பது இசைநிறை (சீர்நிறைஅளபெடை 2. வையத்தார்க் கெல்லாம் :இவ்வையத்தின்கண் மக்களாய்ப் பிறந்து வாழ்ந்து

மறைந்தார்க்கும், வாழ்ந்துகொண்டிருப்பவர்க்கும் எல்லாம். -இவ்வுலகின்கண் பிறவுயிர்கள் அனைத்தும் பிறந்து வாழ்ந்து மறைகின்றன. ஆனால், அவற்றுக்கெல்லாம் வாழ்வுச் சிறப்பு ஏதுமில்லை. ஒன்றுபோல்வதே அனைத்தும். - உயிரினங்களுள் மக்கள் வாழ்க்கைக்கே அனைத்துச் சிறப்புகளும் வரலாறும் உண்டு. ஆனால், அவ்வனைத்துச் சிறப்புகளும் ஒருவர்க்குப்

.