பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அ-2-15 புறங்கூறாமை -19


வேறுபிரித்து ஆசிரியரால் கூறப் பெறுவதை அறிவினார் கவனித்தல் வேண்டும்.

- அவன் பொய் கூறுதல் இரண்டு வகையானது.

- ஒன்று, தான் யாரைப் பற்றிப் புறங்கூறுகிறானோ, அவனிடமே, பின்னர் பொய்யாய் நகைத்து உறவாடுதல்;

- இரண்டு, தான் எவரிடம் போய்ப் புறங் கூறுகிறானோ, அவனிடம் புறங்கூறும் செய்திகளுடன், கவர்ச்சிக்காகப் பொய்யையும் கலந்து கறுதல்.

இவ்விரண்டு பொய் நடத்தைகளையும் இவ்விரண்டு இடங்களிலும் பிரித்து உணருமாறுதான் நூலாசிரியர் இரண்டு கருத்துகளுடன் பொருத்திக் கூறுகிறார், என்க.

2. சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும் - அவன் இறந்துபோதல், அந்த அறக்கேட்டைச் செய்யாததால், வரும் பொதுவான அறப் பயன்களை, இயல்பாக அவன் உயிர்க்குத் தரும்.

- ஆக்கம் என்பது இங்கு, இரண்டு அடிப்படை நிலைகளைக் கொண்டதாகக் கூறப் பெற்றுள்ளது.

- ஒன்று, சாதலுக்குப் பின்வரும் என்பது.

- இரண்டு அறம்கூறும் ஆக்கம் என்பது.

- எனவே, அறம்கூறும் ஆக்கம் சாதலுக்குப் பின்னர் வருவதாக இருத்தல் வேண்டும்.

- அவ்வாறாயின் அஃது என்ன ஆக்கமாக இருத்தல் கூடும்?

- இதற்குப் பரிமேலழகர், தம் ஆரியமதக் கோட்பாட்டின் படி இயல்பாகவே, 'மறுமைக் கண் எய்தும் பயன்' என்று கூறிவிடுகிறார்.

- மறுமைக் கொள்கையையே வேதமத நூலார், அனைத்து வாழ்வியல் சிக்கல்களுக்கும் ஒரு தீர்வாகவே வைத்திருப்பதை, முதலில் நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

- அவ்விய நெஞ்சத்தானுக்கு ஆக்கமும், செவ்வியானுக்குக் கேடும் வருகின்றனவா, அவை முன்னைப் பிறவிகளின் பயன் - என்று எளிதாகக் கூறுவது.

- அறத்தைக் கடைப்பிடிப்பவனுக்கு நன்மை கிடைக்கவில்லையே - ஏன் என்று கேட்டால், அதற்குப் பின்னைப் பிறவியில் - மறுமையில் - பயன் கிடைக்கும் என்பது.