பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

261


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 264

ஒன்றையும் செய்யாமல், வெறுமனே உண்டல், உடுத்தல், உறங்கல், துய்த்தல் முதலிய அஃறிணை உயிரியக்க முறையில் வாழ்ந்து மறைபவர் எல்லாரும் வெற்று வாழ்க்கை நடத்துபவரே, என்றார். என்னை?

1.

‘உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு’ - 993 நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு” - 994 ‘பெருமை உடையவர் ஆற்றுவர் ஆற்றின் அருமை உடைய செயல் - 975

‘கொடுப்பது உம் துய்ப்பது உம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல்’ - 1005 ‘ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு’ -10 12

- என்றார், என்க.

1.

திரையவித்து நீராடல் ஆகா, உரைப்பார் உரையவித்து ஒன்றுஞ்சொல் இல்லை - அரைசராய்ச் செய்தும் அறமெனினும் ஆகாது) உளவரையால் செய்தவற்கே ஆகும் திரு’ - அறநெறிச் 29 ‘உழந்துழந்து கொண்ட உடம்பினைக் கூற்றுண்ண விழைந்திழைந்(து) எங்கணும் தோன்றிச் சுழன்றுழன்ற சுற்றத்தார் அல்லாதார் இல்லைகாண் நன்னெஞ்சே! செற்றத்தால் செய்வ தெவன் - அறநெறிச் :102 மக்களுடம்பு பெறற்கரிது; பெற்றபின் மக்கள் அறியும் அறிவரிது - மக்கள் அறிவறிந்தார் என்பார் அறத்தின் வழுவார்

நெறிதலை நின்றொழுகு வார்’ - அறநெறிச்212 ‘உலவா.முன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும் நிலவார் நிலமிசை மேல் - நாலடி:22:3-4

‘யாக்கையை யாப்புடைத்தாய்ப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கையால் ஆய பயன்கொள்க - யாக்கை மலையாடு மஞ்சுபோல் தோன்றி மற்றாங்கே நிலையாது நீத்து விடும். - - நாலடி 28