பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

263


திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் 263

மயர்வறு கல்வி கேள்வி

தன்மையால் வல்லார் ஆதல், பெரிதுணர் அறிவே ஆதல்,

பேரறங் கோடல் - என்றாங்(கு) அரிதிவை பெறுதல் ஏடா

பெற்றவர் மக்கள் என்பார்! - வளையாபதி 15. ‘வித்திநல்லறம் விளைந்த அதன்பயன்

துய்ப்போர் தம்மனைத் துணிச்சிதர் உடுத்து வயிறுகாய் பெரும்பசி அலைத்தற் கிரங்கி வெயிலென முனியாது புயலென மடியாது புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன் அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்’ - மணிபத்திரt818 16. ‘பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும்

இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் மக்கள் யாக்கை இதுவென வுணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்’ - மணி,உதய.:136-139 - என்று பிறரும் வாழ்க்கைப் பயனை நன்கு எடுத்துரைத்தலைக் கொண்டு வாழ்க்கை வெறுமையாய்ப் புகழின்றிக் கழிதல் இழிவாம் என்றுணர்தல் வேண்டும்.

3) புகழ்பெற முயலாது வாழ்தல் வாழ்க்கையன்று, அத்தன்மையினர் வாழ்பவரும் அல்லர், என்று இவ்வதிகாரத்தை முடித்துக் கூறியதால், இக்குறள் இங்கு இடங்கொண்டது. - 4) இனி, இல்வாழ்க்கை தொடங்கி, புகழ் ஈறாகவுள்ள இல்லறவியலின் இருபது அதிகாரங்களும் இத்துடன் முற்றுப் பெறுவது இல்லறவியல் முற்றுப் பெற்றது குறித்தது. - முன்னர், தீவினையச்சம் அதிகாரத்தின் முன்னுரையில் கூறியபடி, புறப்புறவியல், இப் புகழ் அதிகாரத்துடன் முடிவடைகிறது. மீண்டும் அம்முன்னுரையின் இறுதிப் பகுதியைப் பார்க்க - இக்கால், இல்லறவியலின் ஐந்துகூறுகளாக நாம் பகுத்துக்கொண்ட - அகஅகவியல் கூறில் உள்ள, இல்வாழ்க்கை வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு ஆகிய மூன்று அதிகாரங்களும், * இல்லறவியல் அமைப்பையும், ,