பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

அ-2-20 புகழ் -24


264 அ-2-20 புகழ் 24

- அகவியல், கூறில் உள்ள, அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை

கூறல், செய்ந்நன்றியறிதல் ஆகிய நான்கு அதிகாரங்களும்,

- அகப்புறவியல் கூறில் உள்ள நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை ஆகிய ஐந்து அதிகாரங்களும், - புறவியல் கூறில் உள்ள, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம் ஆகிய ஐந்து அதிகாரங்களும் சேர்ந்து மொத்தம் பதினாறு அதிகாரங்களும், இல்லறவியல் அறங்களையும், - புறப்புறவியல் கூறில் உள்ள ஒப்புரவறிதல், ஈகை ஆகிய முன்னிரண்டு

அதிகாரங்களும், இல்லறவியல் நோக்கத்தையும், இறுதி ஓர் அதிகாரமாகிய புகழ் அதிகாரம் இல்லறவியல் பயனையும்,

கூறுவனவாகக் கொள்க ஆக, இல்லறவியல், இல்வாழ்க்கையில் தொடங்கி இல்லலறவியலின் அறங்களில் நடந்து, இல்லறவியல் நோக்கத்தை நிறைவேற்றி, இல்லறவியலின் பயனாகிய புகழில் முடிவடைகிறது என்க. - - எனவே, இல்லறவியலின் மொத்தப் பயனே புகழ்தான். அதுதான் வாழ்க்கையின் பயனுமாகும் என்க. s - இவ்வகையில் இல்லறவியல் நிறைவுற்றதாம், என்க. 5) இல்லறத்தைப் பற்றி நூலாசிரியரின் முடிவான கொள்கை:

‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை’ - 49 ‘அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒப் பெறுவது) எவன் - 46 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை - - நோற்பாரின் நோன்மை உடைத்து - 48 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ - 56 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். - 240

19-07-93 - இரவு 9.30

சென்னை நடுவண் சிறை.