பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அ-2-15 புறங்கூறாமை -19



சில விளக்கக் குறிப்புகள் :

1. பிறன்பழி கூறுவான் தன்பழியுள்ளும் - ஒருவனைப் பற்றிப் பிறரிடம் போய்ப் பழி கூறுபவனிடம் உள்ள குற்றங்களிலும்

2. திறன் தெரிந்து கூறப்படும் - மிகவும் கடுமையான குற்றங்கள் ஆராய்ந்தறியப் பட்டுப் பிறரால் மற்றவரிடம் கூறப்படும்.

திறன் . இருக்கின்ற குற்றங்களுள் திறனுள்ளவை. அஃதாவது உறுதியுள்ளவை.

- கடுமையானவை.

- மிகக் கடுமையானவை.

- இவன் பழிசுறுகையில், பிறனின் மேலோட்டமான குற்றங்களையே இயல்பாகச் சொல்லியிருந்தாலும், அவற்றை முறியடிக்க இவனுடைய குற்றங்களில், மிகவும் கடுமையானவையாகப் பார்த்து ஆராய்ந்து அறியப்பட்டுப் பிறரால் மற்றவர்களிடம் கூறப்படும்.

- பிறர்பழி கூறுபவனை அடக்க, அல்லது முறியடிக்க, எதிர்ச் செயலாக இந்நிலை தோன்றுவது இயல்பாம் என்க.

- அவ்வாறு முறியடிக்க வேண்டுமெனில், புறங்கறுவானின் குற்றங்களிலும் அவனைப் போலவே பொதுவானவற்றைச் சொல்வது அவ்வளவு வலிவுடையது ஆகாது ஆகலின், அவன் செய்திருக்கும் குற்றங்களிலேயே மிகக் கடுமையானவையாக உள்ளவற்றை ஆராய்ந்து அறிந்து, அவை மற்றவர்களிடம் கூறப்படும், என்றார்.

- ஓர் எழுச்சியை அடக்க, அல்லது முறியடிக்க, அதனினும் வலிவான எழுச்சியாலேயே முடியுமாகலின் மக்கள் மனவியல்படியும், உலக இயங்கியல்படியும், இவ் வாராய்ந்து அறிதல் தேவைப்பட்டது. என்க.

- 'தெரிந்து கூறப்படும்' என்றது, ஆராய்ந்து அறிந்து கூறப்படும் என்பதை,

- ஆராய்தல் - திறனுள்ளவற்றை அறிந்து கொள்ளவே.

- 'திறன்' என்பதற்குப் பரிமேலழகர், 'உளையுந்திறன் உடையவற்றை’ என்றார். அஃதாவது, 'புறங்கூறியவன் மனத்தால் துன்பப்படுவனவற்றை' மிகக் கடுமையானவற்றை என்பதே மிகப்பொருந்துவதாம் என்க.

- பாவாணர் 'கடுமையான'வற்றை என்றார்.

3. இது, பிறன்பழி கூறுகின்றவனுக்கு ஏற்படும் எதிர்விளைவு கூறுதலின், இங்கு வைக்கப்பெற்றது.