பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அ-2-15 புறங்கூறாமை -19



- இந்த நட்புணர்வின் நுட்பம் அறியாமல், ஒருவரைப் பற்றி ஒருவர் புறங்கூறித் தனக்கும், தன்னால் புறஞ்சொல்லப்படுவார்க்கும் உள்ள நட்பையும்,

வேறுபடச் செய்து அந்நட்புகளைப் பிரிப்பாராவர், புறஞ்சொல்லுபவர்.

- எனவே, அவர், ஒருவர்க்கொருவர் நகைத்துப் பேசி மகிழும் படியான நட்பாகவும், துன்பத்துக்குரிய நட்பாகவும் ஆக்குதலால், நட்பின் உயர்வை அறியாதவர் அவர், என்றார்.

2. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - அவர்கள் தம்முள் வேறுபட்டுப் போகும்படி புறஞ்சொல்லி நண்பர்களைப் பிரிப்பர்.

பகச்சொல்லி - பகவுபட்டுப் போகும்படி புறஞ்சொல்லி.

பகவுபடுதல் - பிளவுபடுதல்,

- வேறுபடுதல்.

கேளிர்ப் பிரிப்பர் - நண்பர்களைப் பிரிப்பர்.

'கேளிர் என்பதற்குத் தம் உறவினரை' என்பார் பாவாணர்.

‘நட்பாடல்' என்னும் செயல் இங்குக் குறிப்பிடப்படலால், கேளிர் என்னும் சொல் நண்பர்களையும் குறிக்கும் என்க.

- கேளிர் என்பது, இருதிறத்து நண்பர்களையும் குறிக்கும்.

3. பிறர் பழியும், தன்பழியும் கூறப்படுதலை முன்னர்க் கூறியவர், இதில் அவ்வாறு செய்தவழி இருநிலை நட்பும் கெடும் என்றதால், அதன் பின் இது நிரல் கொண்டது.


கஅஅ. துன்னியர் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு - 188

பொருள்கோள் முறை :

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
ஏதிலார் மாட்டு என்னை கொல்.

பொழிப்புரை : தம்மொடு பொருந்திய நண்பர்தம் குற்றத்தையும் வெளியில் போய்ப் பழிதூற்றுகின்ற வழக்கம் உடையவர், தமக்குத் தொடர்பற்றவர் தம்நிலையில் என்னபடி நடந்து கொள்வாரோ?