பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

43


‘வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும்; கற்றார்வாய்ச்
சாயினும் தோன்றாக் கரப்புச் சொல் - தீய
பரப்புச் சொல் சான்றார்வாய்த் தோன்றா; கரப்புச்சொல்
கீழ்கள்வாய்த் தோன்றிவிடும்’ - நான்மணி:95

‘இன்னா, கொடும்பாடு உடையார்வாய்ச் சொல்’ - இன்னா:6:4

'அறையறை யன்னர் சொல் இன்னா’ - இன்னா:23:3

‘வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா - இன்னா:28:3

‘யாதும் அருள்புரிந்து சொல்லுக சொல்லை’ - திரிகடு: 90:3

‘படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே என்றும்
அசையாத உள்ளத் தவர்’ - ஆசாரக்: 52

‘விரைந்துரையார், மேன்மேல் உரையார், பொய்யாய
பரந்துரையார், பாரித் துரையார் - ஒருங்கு எனைத்தும்
சில்எழுத்தி னானே பொருளடங்கக் காலத்தால்
சொல்லுக செவ்வி அறிந்து - ஆசாரக்:76

‘. . . . . . . . . . . . . பொய்யே,
குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் - நான்கும்
மறலையின் வாயினவாம் மற்று’ - ஏலாதி: 28

'இயைபு இல்லா வன்சொல்லால் ஆகும் பகைமை' - சிறுபஞ்ச:95:2

‘உரைப்பவன், கேட்பான், உரைக்கப் படுவது
உரைத்ததனால் ஆய பயனும் - புரைப்புஇன்றி
நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
வான்மையின் மிக்கார் வழக்கு’ - அறநெறிச்:3

'அற்றுஅறியும் காரணத்தை ஆராய்ந்து அறவுரையைக்
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே’ - அறநெறிச்:33:1-2

'தன்னையும் தன்னில் பொருளையும் பட்டாங்கில்
பன்னி அறம் உரைக்க வல்லார்’ - அறநெறிச்:42:1-2

'நம்மைப் பிறர்சொல்லும் சொல்இவை; நாம்பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்குஇவை என்றெண்ணி
உரைகள் பரியாது உரைப்பார்' - அறநெறிச்:214:1-3

‘சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் நன்றமைந்த