பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

45


‘கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்' - 403

‘கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்’ - 405

'இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்’ - 415

‘பிழைந்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்’ - 417

‘செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்’ - 431

'நாநலம் என்னும் நலனுடைமை’ - 641

'ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு’ - 642

‘திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின்ஊஉங் கில்' - 644

‘சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து’ - 645

'பிறர்சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்’ - 646

'சொலல்வல்லன் கோர்விலான் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது' - 647

'விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்' - 648

‘இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்’ - 650

'ஆராய்ந்த சொல் வன்மை’ - 682

‘தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது' - 685

‘கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லி' - 686

‘வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன்' - 689

‘குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்’ - 696