பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

53


- இதற்குப் பரிமேலழகரும் அவரை யொட்டிப் பாவாணரும் ஞாயம் (நீதி) (நெறி) என்று பொருள் கூறுவர்.

- ஒருவன் ஞாயமுள்ளவன் எனில், அவன் தனக்கும் பிறர்க்கும் நடுநிலை உணர்வுடையவனாக இருத்தல் வேண்டும்.

- எனவே, பயனில்லாதவற்றைச் சொல்பவன் ஞாய உணர்வு இல்லாதனாக இருத்தல் வேண்டும். ஞாய உணர்வு உள்ளவனே அவ்வாறு நடவாத பொழுதுதான் அவன் ஞாயமில்லாமல் நடக்கிறான் என்பது சரியான கூற்றாக இருத்தல் முடியும் என்னை? பார்வை உணர்வு உள்ளவனைத்தான் இவர் பாராதவனாக இருக்கிறான் என்று சொல்வது சரியாகும். பார்வை யற்றவனைப் போய், இவன் பாராதவனாக இருக்கிறான் என்று சொல்வதில் பொருளில்லை, என்க.

எனவே, இங்கு 'நயனிலன்’ என்பதற்கு அவன் யாருக்கும் நன்மையில்லாதவனாக இருக்கின்றான் அல்லது இருப்பான் என்பதே சரியான கூற்றாகும்.

'நயன்' - நன்மை என்றும் பொருள் தரும்.

‘பயன்துக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலினும் பெரிது' - (103)

- என்னும் குறளில் நயன் - நன்மை என்று பொருள் பட்டது.

- பயனில்லாத வற்றைச் சொல்பவனே யாருக்கும் நன்மை யில்லாதவனாகவும் இருத்தல் முடியும்.

- அவன் உரையுள் எவ்வாறு அவனுக்கோ, பிறர்க்கோ நன்மை இருக்க இயலாதோ, அப்படியே அவன் யார்க்கும் நன்மை உடையவனாகவும் இருத்தல் இயலாது. .

- எவனுடைய உரையில் பயன் நன்மை - இல்லையோ, அவனும் பயனில்லாதவனாகவே - நன்மையில்லாதவனாகவே இருப்பான் என்பதே இக்குறளின் திரண்ட பொருளாகும். இதனைச் சுருக்க விளக்கமாகச் சொன்னால், ஒருவன் பயனில்லாதவன் என்பதை அவனின் பயனில்லாத வாயுரையே காட்டிவிடும் என்றார், என்க.

- இன்னும் சுருக்கிச் சொல்வதானால், 'வீண்பேச்சும் வெற்றுப் பேச்சும் உள்ளவன் வீணன் என்று கருதிக் கொள்ளுதல் வேண்டும்' என்றார், என்க.

‘வீணனை ஞாயமில்லாதவன்' என்பது மிகை.

3) 'பயனில சொல்லுவான் யார்க்கும் தீங்குசெய்வான் என்று முன்ன்குறளில் கூறியவர், அதன் மறுதலையாக, அவனால் யார்க்கும் நன்மையில்லை