பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அ-2-16 பயனில சொல்லாமை 20


பயனில்லாத பண்பில்லாத உரைகள் செய்து விடும் என்பது, அவ்வுரைகளைக் கேட்டவர்களுக்கு ஏற்படும் விளைவுகளாக, ஆசிரியர் கூறுவது நுணித்து அறியக் கூடியது.

- இவ் விளைவுகளை பயனில சொல்லுவார் மேல் சாற்றிக் கூறுவதாக உரைதருவது, பொருத்தமும் சிறப்பும் இல்லாதது என்று கூறி விடுக்க

. இக்குறள் கூறும் பொருளை இவ்வதிகாரத்தில் வரும் 196 ஆம் குறளில் மேலும் விளக்குவார், அதன் சிறப்பை ஆண்டுக் கூறுவாம்.

3) இதில், பயனில சொல்லுவான் உரைகளைக் கேட்பவர்களுக்கு ஏற்படும் மனஅழிவு விளைவுகள் கூறப்பெற்றதால் முன்னவற்றைத் தொடர்ந்து இது நிரல்படுத்தப் பெற்றது என்க.


கசு ரு. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின். - 195

பொருள்கோள் முறை

நீர்மை உடையார் பயனில சொலின்,
சீர்மை சிறப்பொடு நீங்கும்.

பொழிப்புரை: நல்லகுணம் உடையவர் பயனில்லாதவற்றைச் சொல்வாராயின், அவர்க்குற்ற மேன்மையும் பெருமையும் ஒருங்கே நீங்கிவிடும்.

சில விளக்கக் குறிப்புகள்

1) நீர்மை உடையார் பயனில சொலின் : நல்ல குணநலன் உடையவர் பயனில்லாதவற்றைச் சொல்வாராயின்,

நீர்மை - நீரினது தன்மை,

- அஃதாவது குளிர்மை, பரவல் தன்மை, நெகிழ்வு மற்றவர்க்குத் தக நடத்தல் - முதலிய நல்ல குணங்கள் உடையதாம் தன்மை. (பார்க்க: ‘ஒழுக்கமுடைமை' - அதிகார முன்னுரை). இயல்பான தன்மையும் ஆம்.

‘தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை
எக்காலும் குன்றல் இலராவர்'. - நாலடி :112 : 1

'நீர்மை கொண்டன தோள்' - ஐந் ஐம்.2:4

'குணநீர்மை குன்றாக் கொடி அன்னாள்' - திணைமொழி 44:3

'நட்பின் நய நீர்மை' - திரிகடு : 86 : 13