பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அ-2-17 தீவினையச்சம் -21



2) தீயினின்று ஒருவன் தப்பிப் பிழைக்கலாம்.

- தீமையினின்று தப்புதலே இயலாது.

3) தீ, காலம், இடம், பொருள் எனும் எல்லைகளுக்குட்பட்டே தீமைசெய்யும்.

- தீமை, அவற்றுக்கு அப்பாலும் சென்று தீமை செய்யும்.

4) தீ பற்றிய பொருளழிவுக்குப் பின் தானே அழிந்துவிடும்.

- தீமை ஒரழிவுக்குப் பின் வேறார் அழிவு செய்யவும் மூண்டு எரியும்.

5) தீ, ஒன்றில் தானே பற்றி எரியாது.

- தீமை தானே பற்றி எரியும்.

6) தீயை அடக்கி ஆளலாம்.

- தீமையை அடக்கி ஆளமுடியாது. அதுதான் பிறரை அடக்கி ஆட்சி செய்யும்.

7) தீயினால் உலக நன்மைகள் பலவாம்.

- தீமையினால் கேடுகளே அன்றி நன்மைகள் இலவாம்.

8) தீ பற்றியதை மட்டுமே அழிக்கும்.

- தீமை பற்றியவனை மட்டுமன்றி, அவன் குடும்பத்தையும் சுற்றத்தையுங்கூடப் பற்றி அழிக்கும்.

- எனவே, தீயை விடத் தீமைக்கு அஞ்சுதல் வேண்டும் என்றார்.

3) தீயவை எனப்படுபவை, தீயினும் அழிவு செய்தலால், அதனினும் கொடியது என்றார். அது தீவினை என்னும் செருக்குக்கு விளக்கமாயமைதலின், அதன் பின்னர் இதை வைத்தார்.


உ0௩. அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். - 203

பொருள்கோள் முறை:

செறுவார்க்கும் தீய செய்யா விடல்
அறிவினுள் எல்லாம் தலை என்ப.