பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

81


தண்டனையாக என்ன கேடுகள் செய்யலாம் என்பது பற்றி அறம் எண்ணிப் பார்க்கும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1) இஃது ஒர் 'உருவக'ச் செய்யுள் (Metaphor).

இதில் முன்னைய உருவகங்களைப் போல, அறம் ஓர் உருவமாகவும், தெய்வமாகவும் உருவகிக்கப் பெற்றுள்ளது.

- இது போலும் உருவகங்களை பல நல்லுணர்வுகளுக்கும். வல்லுணர்வுகளுக்கும் ஆசிரியர் கையாண்டுள்ளது பற்றி முன்பே (77, 84, 130, 167, 168, 179) ஆகிய குறட்பா விளக்கங்களுள் கூறப் பெற்றுள்ளது.

‘அறத்'தை ஒரு தெய்வமாக உருவகித்துள்ளமை :

‘அறம் காயும்’ - (77)

‘அறம் பார்க்கும்’ - (130)

‘அறம் சூழும்’ - (204)

'செல்வ'த்தை ஒரு பெண் தெய்வமாக உருவகித்துள்ளமை :

‘செய்யாள் உறையும்’ - (84)

‘செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்’ - (167)

'சேரும் திரு’ - (179)

'நீங்கும் திரு’ - (519)

'தாமரையினாள்' - (617)

'திரு நீக்கப்பட்டார்'. - (920)

'சோம்பலை' 'வறுமை'யை - ஒரு தீத் தெய்வமாக உருவகித்துள்ளமை.

‘தவ்வையைக் காட்டிவிடும்’ - (167)

‘மடியுளாள் மாமுகடி’ - (617)

'நில'த்தை ஒரு பெண் தெய்வ்மாக உருவகித்துள்ளமை:

'நிலம்' என்னும் நல்லாள் - (1040)

'நாண'த்தை ஒரு பெண் தெய்வமாக உருவகித்துள்ளமை.

'நாண்' என்னும் நல்லாள்'. - (924)

‘சாவை' ஒரு கொடுந்தெய்வமாக உருவகித்துள்ளமை:

'கூற்றம் குதித்தலும் கைகூடும்' - (269)

‘உயிருண்ணும் கூற்று’ - (236)