பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

அ-2-17 தீவினையச்சம் -21


 மக்களை அச்சுறுத்தல் நோக்கி, என்க.

-இவ்வகையில், ஆரியவியலில் ஏராளமான, அறவிறந்த, மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட கற்பனைகள் கதைகள் உண்டு.

- நரகம், எமவுலகம், தீயவற்றுக்கு அங்குத் தரப்பெறும் தண்டனைகள்,

- துறக்க(சுவர்க்க)வுலகம், இந்திரவுலகம், நல்லவற்றுக்கு அங்குத் தரப்பெறும் நற்பயன்கள் முதலியவாம், அவை.

- இவை தமிழியலுக்கு முற்றிலும் புறம்பானவை மட்டுமல்ல மாறானவையும் ஆகும் என்க.

- நூலாசிரியர்க்கு இவற்றிலெல்லாம் முற்றிலும் உடன்பாடும், அறிவுப் பற்றுதலும் இல்லை யென்றாலும், ஒரிரு பொதுநல வுணர்வு நலன்கள் கருதியும், அக்காலப் புரிதல் உணர்வு, கருதியும், ஆங்காங்கே ஒன்றிரண்டு கருத்துகளைக் கூறியுள்ளார் என்க. அவை,

‘இந்திரனே சாலும் கரி' - 25

‘பெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு’ - 58

‘புத்தேள் உலகத்தும்’ - 213

‘போற்றாது புத்தேள் உலகு' - 234

‘கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு' - 290

‘புத்தேள் நாட்டு உய்யாதால்’ - 966

‘புத்தேள்நாடு உண்டோ’ - 1323

'தேவர் அனையர்’ - 1073

'திங்களைப் பாம்புகொண் டற்று' (இராகு) - 1146

- முதலியவாம் என்க.

- ‘அறம் குழும்' என்பது, தனிப்பட்ட ஒருவர் செய்யும் குமுகாயக் கேட்டுக்கு எதிராக ஏற்படும் குமுகாயப் பொது விளைவுகளையே குறிக்கும் என்று கொள்க.

- ஒருவனுக்கு மற்றவன் கேடு விளைக்க எண்ணுகிறபோதே அவனுக்குள்ளேயே அதற்கு எதிரான உணர்வுகளும் தோன்றி விடும். - என்பதோர் உளவியல். அதனை அவன் தன் துணையாளர்களிடமோ, தன் எண்ணத்தைச் செய்து முடிக்க இருப்பவனிடமோ சொல்லி, அதைச் செயலுக்குக் கொண்டுவர முயலும் பொழுது, அவர்களின் மனங்களிலும் இரண்டாவது எதிர்விளைவுகள் தோன்றி விடுகின்றன.