பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

85



இவ்வாறு படிப்படியாய் அத்தீய எண்ணம் செயலுக்கு வருவதற்குள் பல படிநிலைகளில் அத்தீய எண்ணத்திற்கு எதிரான எண்ணமும் வலிவு பெற்று விடுகிறது. என்னை?

'ஒவ்வொரு செயலுக்கும் நேர் எதிரான அதே வலிவான ஒர் எதிர்ச்செயல் உருவாகி விடுகிறது’ (for every action there is an equal and opposite reaction) என்பது அறிவியல் உண்மை.

- இந்த அறிவியல் உண்மையைத்தான் முன்னாளைய அறிஞர்கள் மெய்யறிவியல் உண்மையாக - இயற்கை உண்மையாக வெளிப்படுத்தினர். நூலாசிரியரும் இவ்வுண்மையை வேறு இடங்களில் வேறு வகையாகவும் வெளிப்படுத்தியுள்ளதைக் காணலாம்.

- கீழே குறிப்பிடப்பெறும் எண்களுள்ள குறட்பாக்களை நோக்குக:

- 31, 32, 38, 77, 83, 84, 85, 98, 107, 110, 112, 116,117. 121, 122, 123, 127, 130, 136, 137, 155, 156, 163, 168, 171, 178, 186, 208, 271, 283, 293, 329, 330.

- இன்னும் பலவற்றை இனிவரும் இடங்களிலெல்லாம் கண்டு கொள்க.

- இவற்றில் கூறப்பெற்றுள்ள கருத்துகளெல்லாம் குமுகாய அளவில் ஏற்படும் பொதுஅற விளைவுகளே என்பதை உற்றறிந்து உணர்க.

- இவற்றுள், மிகவும் தெளிவாகப் பளிச்சென்று கூறப்பெற்றுள்ள ஒரு கருத்து மட்டும் ஒருசோற்றுப் பதமாக இங்கு வைக்கப்பெறுகிறது.

'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்' - 329

- இதற்கியைபாக வேறு பிறரும் கூறிய கருத்துகளில் ஓரிரண்டையும் கீழே காணலாம்.

'முற்பகல் கண்டான் பிறன்கேடு, தன்கேடு
பிற்பகல் கண்டு விடும்' - பழமொழி:130 : 3-1

'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' - கொன்றைவேந்தன்:74

‘பிறர்க்கின்னா செய்தலின் பேதைமை இல்லை
பிறர்க்கின்னா தென்றுபேர் இட்டுத் தனக்கின்னா
வித்தி விளத்து வினைவிளைப்பக் காண்டலின்
பித்தும் உளவோ பிற’ - அறநெறிச்சாரம்:96

‘தானே தனக்குப் பகைவனும் நட்டானும்