பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

93


என்றார் ஆசிரியரும்.

இளையதாக இருக்கும்பொழுது முள்செடியை எளிதாக வேரோடு கொன்றுவிட முடியும். அது முள்மரமாக வளர்ந்து விட்டால் அதனை அழிப்பது இயலாது. அது வெட்ட வெட்ட வளரும் அக்கால் அது கைகளையும் வருத்தும் என்றார். இங்கு அவர் கூறும் செயல் எளிமையையும், செயற்கடுமையையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

‘கிள்ளி எறிவதைக் கோடரிபோட்டு வெட்டி யெறியும் படி விடுவதா’ என்பது ஒரு பழமொழி வழக்கு.

- பகையுணர்வுகள் வளரவிடாது மனத்தைத் துய்மையாக வைத்துக் கொண்டால் தீயவுணர்வுகள் தோன்றுதற்கு வழியில்லை, என்க. என்னை ?

‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்' - 34

‘மனம்துயார்க்கு எச்சம் நன்றாகும்’ - 456

‘மனநலன் மண்ணுயிர்க்கு ஆக்கம்’ - 457

‘எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மானாசெய் யாமை தலை’ - 317

‘நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு' - 161

‘பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்
ஆகுதல் மானார்க்(கு) அரிது’ - 823

‘அறம் சொல்லும் நெஞ்சத்தான்’ - 185

- மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளாமை பலவகையான தீய எண்ணங்களும் தோன்றவே வழி செய்யும்.

- மனமாசு பலவகைப் பட்டது. அம்மாசு உள்ளவர்களைப் பலவாறு தாழ்வு படுத்திக் கூறுவார், ஆசிரியர்.

‘மனத்தது மாசாக’ - 278

‘வஞ்ச மனத்தான்’ - 271

‘அகம் குன்றியவர்’ - 277

‘அவ்விய நெஞ்சத்தான்' - 169

‘நெஞ்சத்துக் கோடாமை’ - 115

'களவறிந்தார் நெஞ்சம்’ - 288

‘தன்நெஞ்சம் நடுவுஒரீஇ அல்ல செய்தல்’ - 116

'நிறை நெஞ்சம் இல்லவர்' - 917