பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

அ-2-17 தீவினையச்சம் -21


 3) ஒருவர்கொருவர் அடித்டி செய்து கொள்வது.

4) குடும்பத் தொடர்பான தீமைகள் செய்வது.

5) குழந்தைகள் தொடர்பாக வரும் கடுங்குற்றச்சாட்டுகள்.

6) உடைமை உரிமைகள் பற்றிவருவது.

7) பகைவர்க்கு நட்பாவது.

8) ஒருவரை ஒருவர் வஞ்சித்தல், ஏமாற்றல், இகழ்தல், புறங்கூறுதல் முதலியவற்றால் நேர்வது.

9) ஆண், பெண் தொடர்புத்தவறால் விளைவது.

10) மிகுதேவைக் குதவாமை அல்லது உதவியைத் திருப்பித் தராமை.

11) பொருளியல் ஏற்றத்தாழ்வுகள், சாதி, சமய, அரசியல் முரண்பாடுகள்.

12) போட்டி, பொறாமை, சீரழிவு காரணமாக வருதல்.

முதலியவை. பெரும்பாலும் நெருக்கமாகப் பழகுபவர்களே, பின்னர் முற்கூறிய ஏதோ சில காரணங்களால் பகைவர்களாக மாறுகின்றனர். என்னை?

‘அடுத்திருந்து மாணாத செய்வான் பகை’ - 867

‘குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை’ - 434

‘வினை, பகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்’ - 674

‘அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு' - 863

'நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு’ - 995

‘ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்’ - 873

- என்றார் ஆகலின்.

'பகைப்பவர் என்பவர் பழகி யிருந்தவர்’ - கனிச்சாறு

'பழகிய பகையும்’ - நற்:108:6

'அருந்தொழிற் பகை’ - ஐங்: 450:1

'மழவர் வாய்ப்பகை’ - அகம்: 101:6

‘யார்மாட்டும், கொள்ளாமை வேண்டும் பகை' - நான்மணி:85:4

- என்றார், பிறரும்,