பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/16

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10 திருக்குறள் விளக்கு

பாராட்டுரைகளைச் சொன்னேன். பாரதியாரே திரு வள்ளுவர் உலகப் பொது நூலைத் தந்தவர் என்று பாடியிருக்கிறாரே. -

(வேறுகுரல் பாடுகிறது )

வள்ளுவன் தன்னை உலகினுக்

கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

உலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.

குரல் அ: பலமொழி வல்லவரும் திருக்குறளை ஆங் கிலத்தில் மொழிபெயர்த்தவருமாகிய வ. வே. சு. ஐயரவர்கள் சொல்வதையும் கேட்காமல் இருக் கலாமா?

வேறு குரல் : திருவள்ளுவர் உலகத்துக்கு அளித்த இந்த நூலைப்போல முழுமையான உருவமும், கருத் தாழமும், உணர்ச்சியின் மாட்சியும், ஒழுக்கத்தில் அன்பும் கொண்ட நூல்கள் மிக அரியனவாகவே காணப்படுகின்றன. தம்முடைய காலத்துக்கும் நாட்டுக்குமேயன்றி எல்லாக் காலத்துக்கும் மனித சாதி அனைத்திற்கும் பயன்படும் உபதேசங்களைச் செய்த ஞானியர்களில் அவர் ஒருவர். • ,

குரல் ஆ: அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, முன் சொன்ன கருத்துக்கள் இன்றும் புத்தம் புதி யனவாய் உள்ளன. கதிரவனைப்போல, திங்களைப் போல, தென்றலைப் போல, காலத்தால் பழையன

- 1. Tiruvalluvar has given to the world a work to which, in perfection of form, profundity of thought, mobleness of sentiment, ‘and earnestness of moral purpose, very few books.........can at all be:

compared. -

He is one of those seers whose message is intended not merely for their own age or country but all time and før all mankind.

- V. V. S. Αiyar, in his Ρrefαce to his translation of the kural..