பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. திருக்குறள் விளக்கு

கோள்; ஏற்றதோர் வழி நமது சக்திக்கு உட்பட்ட தாகவே இருக்கவேண்டும். ஆகையால் அஹிம்சை நமது முக்கியமான கடமை."

குரல் அ: அஹிம்சையைக் கடைப்பிடித்தால் சத்திய

 மென்னும் குறிக்கோளைச் சாரலாம் என்பது காந்தி 
 யடிகள் கருத்து. வேறு பல இடங்களில் அஹிம் 
 சையையும் சத்தியத்தையும் மிகவும் தலையான 
 பண்புகளாக வற்புறுத்திச் சொல்கிருர், இந்தக் 
 கருத்தைக் கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டு 
 களுக்குமுன்பே திருவள்ளுவர் சொல்லியிருக்கிரும் 
 என்பது வியப்பைத் தருகிறதல்லவா? சுருக்கமான 
 வடிவத்தில் இருந்தாலும் பெருக்கமான பொருளைத் 
 தரும் குறள் அது. வள்ளுவர் பாடுகிறர். 

வேறு குரல் : (பாடுகிறது.) -

ஒன்முக நல்லது கொல்லாமை; ஒன்ருக நல்லது கொல்லாமை; மற்று அதன் பின்சாரப் பொய்யாமை நன்று. நல்லது கொல்லாமை, ஒன்ருக நல்லது கொல்லாமை-மற்று அதன் பின்சாரப் பொய்யாமை நன்று.”

குரல் அ. கொல்லாமையை முதலில் வைத்தார்.
     அதன்பின் சார் வருவது, பொய்யாமை என்னும் சத்தியம். ஏதோ முதலிடம் கொல்லாமைக்கு என்றும் இரண்டாம் இடம் உண்மைக்கு என்றும் வைத்ததாகக் கொள்ளக்கூடாது. கொல்லாமை

1. மகாத்மா காந்தி நூல்கள், தொகுதி 2, பக்கம், 19. 2. குறள், 323.