பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/37

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு 31

குரல் அ: இது ஒரு கருத்தை உள்ளே மறைத்து வைத்து, சொல்லாமல் சொல்கிறது. அது ஒரு வகை அலங்காரம். இதற்கு என்ன பொருள் என்பதைத் திருக்குறளின் உரையாசிரியர்களில் சிறந்த பரிமேலழகரைக் கேட்டால் சொல்வார்.

வேறு குரல் : பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாம் அளவும் சென்று நின்றான், பின் அவ்வளவின் நில்லாது, மன எழுச்சியால் மேலும் செல்லுமாயின், அவ் வெழுச்சி, வினை முடிவிற்கு ஏது ஆகாது, அவன் உயிர் முடி விற்கு ஏதுவாம் என்னும் பொருள் தோன்ற நின்றமையின்...... .


குரல் ஆ : ஓ! அரசன் போர் செய்யப் போகும்போது தன்னுடைய படைவலியின் அளவை அறிந்து அதற்கு அடங்கிய வகையில் முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்பது இதனால் அடங்கிய பொருளா? நன்றாக இருக்கிறது! குறிப்பினால் இதனை உணரும் போது, இந்தப் பாடலின் அருமையை உணர்ந்து இன்புறலாம் என்பதில் ஐயம் இல்லை.

(மாற்றம்.)

குரல் அ. காமத்துப்பால் முழுவதும் கவிச்சுவை ததும்பும் பகுதி. ஒவ்வொரு பாடலும் காதல் நாடகத்தின் காட்சியாக நிற்கிறது. ஒரு காட்சியை இங்கே கண்டு மகிழலாம். . . - -

. (மாற்றம்.)

★ .