பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 93

மத்துகள்தாம். இங்கே வீக்கமுடன் விளங்கக் காண்ப தெல்லாம் மங்கையரின் கொங்கைகள்தாம். வெடிக்கக் காண்பதெல்லாம் தோட்டத்திலேயுள்ள முல்லை யரும்புகள்தாம். ஏங்கக் காண்பது எல்லாம் மங்கலமான பேரிகைகளின் ஒலியேயாம். இப்படிப் பட்ட ஈசருக்குச் சொந்தமான மேலான நாடே எங்களுடைய நாடாகும்.

நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்

நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல் தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து சுழலக் காண்பது பூந்தயிர் மத்து வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை -

வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை ஏங்கக் காண்பது மங்கல பேரிகை

ஈசர்ஆரிய நாடெங்கள் நாடே. g 8 (பாவந் தவிர ஏதும் இங்கே நீங்குவதில்லை. கன்னலும் செந்நெலும் நெருங்குவது தவிரப் பிற நெருக்கடிகள் இங்கே இல்லை. மாம்பழம் தொங்குவதன்றி மனிதர்கள் தொங்கிக் கிடந்து வாடுவதில்லை. மத்துகள் சுழல்வதன்றி மக்கள் வருந்தி வாடி மனம் சுழல்வதில்லை. கொங்கைகள் வீங்குவதன்றிக் குறிப்பிட்டார் சிலர் மட்டும் செல்வத்தால் வீக்கம் பெறுவதில்லை.பேரிகை புலம்புவதன்றி மக்களுள்ளே எவரும் வாய்விட்டுப்புலம்புவதில்லை. இத்தகைய வளநாடு என்கிறார். தூங்குதல் - தொங்குதல். வீங்குதல் - பூரித்தல், ஏங்குதல் புலம்புதல்)

(9) இங்கே ஒடிக் கொண்டிருக்கக் காண்பதெல்லாம் பூக்களுடன் வரும் புதுவெள்ளப் பெருக்கமேயன்றி மக்கள் அல்லர். இங்கே ஒடுங்கக் காண்பதெல்லாம் யோகியரின் உள்ளங்களேயன்றி மக்கள் அல்லர். இங்கே வாடக் காண்பது எல்லாம் நங்கையரின் இடைகளேயன்றி மக்களுள் எவரும் அல்லர். இங்கே வருந்தக் காண்பதெல்லாம் முத்துகளை ஈன வருந்தும் சங்கினங்களே யன்றி மனிதர்கள் அல்லர். இங்கே போடக் காண்பதெல்லாம் பூமியில் வித்துகளே யல்லாமல்