பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1OO திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

உற்றதொரு பனிமலையின் கொற்றவேந் தனுக்கும் உயர்மதுரை மாறனுக்கும் செயமருகர் கண்டாய் வெற்றிபெறும் பாற்கடலிற் புற்றரவில் உறங்கும்

வித்தகர்க்குக் கண்ணான மைத்துனர்காண் அம்மே! 4 (கிளைவளம் - குலப்பெருமை. பெரிய குலம் - பெருஞ் சிறப்பு உடைய சிவகுலம். உற்றுக் கேட்டல் - உன்னிப்பாகக் கேட்டல். மதுரை மாறன் - மதுரைப் பாண்டியன். புற்றரவு - புற்றிலே வாழும் இயல்பினையுடைய பாம்பு, இங்கே ஆதிசேடன்) வெள்ளை யானையான அயிராவதத்தினைத் தனக்கு ஊர்தியாக உடைய தேவேந்திரனை வானுலகில் நிலையாகத் தன் பதவியிலேயே இருத்தியவர்; பெருச்சாளி வாகனத்த வரான மூத்த பிள்ளையார். அவருக்கும் மயில் வாகனராகிய குமரப் பெருமானுக்கும், தன் கைப்படையினால் தன்னைப் பெற்ற தந்தையின் காலினையே வெட்டியெறிந்த சண்டேசுவர நாயனார்க்கு, சீர்காழி நகரிலே தோன்றிய திருஞான சம்பந்தருக்கும் இவர் தந்தையாவர் என்பதைக் காண்பாயாக தேவசேனைகளையுடையவனும் வேள்விகட்குத் தலைவனு மான தேவேந்திரனின் அரண்மனையிலேயுள்ள ஐராவத யானையினால் வளர்க்கப் பெற்ற, பெண் யானை போன்ற தேவ யானைக்கும் தேனிறால் மிகுதியாகப் பெற்றுள்ள மலைச்சாரலிலே மான் பெற்றெடுத்த பூங்கொடியாகிய வள்ளியம்மைக்கும் மணம் பாருந்திய செந்தாமரை மலர் மேலிருக்கும் மெளன நிலையினையுடைய தேவருக்கும், மன்மதனுக்கும் இவர் மாமனார் ஆவார்.

ஆனைவாகனத்தானை வானுலகில் இருத்தும்

ஆகுவா கனத்தார்க்கும் தோகைவாகனர்க்கும் தானையால் தந்தைகா லெறிந்தமகனார்க்குந்

தருகாழி மகனார்க்கும் தகப்பனார் கண்டாய் சேனைமக பதிவாசல் ஆனைபெறும் பிடிக்கும்

தேனீன்ற மலைச்சாரல் மானின்ற கொடிக்கும் கானமலர் மேலிருக்கும் மோனஅயனார்க்கும்

காமனார் தமக்குமிவர் மாமனார் அம்மே! 8