பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் * 117

கண்ணிகள் வாகனத்தில் ஏறிவரும் யோகபுருடன் - அவன்

வங்காரப் பவனியாசைப் பெண்களுக் குள்ளே தோகைநீ அவனைக்கண்டு மோகித்தாய் அம்மே -அது சொல்லப் பயந்திருந்தேன் சொல்லுவேன் முன்னே காகம்அணு காததிரி கூட மலைக்கே உன்மேற்

காய்ச்சலல்ல காய்ச்சலல்ல காமக் காய்ச்சல்காண் மோகினியே உன்னுடைய கிறுகிறுப் பெல்லாம் - அவன்

மோகக்கிறு கிறுப்படி மோகனக் கள்ளி! (வங்காரம் - ஒழுங்கு)

30. தாரும் பேரும் ஊரும்! குறப் பெண்ணே! இந்த நல்ல நகரத்தின் உள்ளே கன்னிப் பெண்ணாக நான் இருக்கும்போது சற்றும் வாய் கூசாமல் என்னைக் காமக்கள்ளி' என்றும் சொல்லி விட்டாய். நீ குறிப்பாகச் சொன்ன குறியினை உண்மையே என்று நிலை நாட்டுபவளானால் மாலையும், பேரும், ஊரும் ஆகிய விவரங்களையும் இப்போதே சொல்லடி!

கண்ணிகள் கன்னியென்று நானிருக்க நன்னகர்க்குள்ளே -என்னைக்

காமியென்றாய் குறவஞ்சி வாய்மதி யாமல் சன்னையாகச் சொன்னகுறி சாதிப்பாயானால் - அவன்

தாரும்சொல்லிப் பேரும் சொல்லி ஊரும்சொல்லடி

31. பெண்சேர வல்லவன்!

பெண்களின் நாயகமே! உன்னைப் போல அவன் எனக்கு நன்றாக அறிமுகமானவனோ அம்மையே! ஊரும் பேரும் சொல்லுவது குறிமுகமோ? அல்லவே! பின்னையும், அவற்றையும் உனக்காகச் சொல்லுவேன். அவன் பெண் களைச் சேர்ந்து அநுபவிப்பதிலே மிகவும் வல்லமை யுடையவன் அம்மையே!