பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

கண்ணிகள் உன்னைப்போல் எனக்கவன் அறிமுகமோ - அம்மே ஊரும் பேரும் சொல்லுவதுங் குறிமுகமோ? பின்னையுந்தான் உனக்காகச் சொல்லுவேனம்மே - அவன்

பெண்சேர வல்லவன் காண் பெண்கட் கரசே!

32. சினங்கொள்ளல் பெரிய காடடர்ந்த மலைநாட்டிலேயுள்ள குறத்தியே! கள்ளியே! மயில் போன்றவளே! உன்னுடைய மேனி வலிமையின் குறும்போ? வாய்மதமோ? அல்லது உனக்குத் தெரிந்த வித்தையின் செருக்கோ? என்முன், கொஞ்சமும் மதியாமல், என் காதலனைப் பெண்சேர வல்லவன் என்று துற்றினாய்! கண் மயக்கால் என்னை மயக்கப் பார்க்காதே. உண்மையைச் சொல்லடி

வண்மையோ வாய்மதமோ வித்தை மதமோ - என்முன்

மதியாமற் பெண்சேர வல்லவன் என்றாய் கண்மயக்கால் மயக்காதே உண்மை சொல்லடி - பெருங்

கானமலைக் குறவஞ்சி கள்ளிமயிலி: 33. குறத்தியின் பதில் பெண்களுக்கு அரசி போன்றவளே! பெண்’ என்றால் 'திரி என்றும் பொருள் உண்டு. ஒரு பெண்ணுடனே சேர என்றால் ‘கூட என்றும் சொல்லலாம். உறுதியாக வல்லவன் என்பதும், 'நாதன் என்பதும் ஒரே பொருள் தரும். அதனால், அவன் பெயரைத் திரிகூடநாதன் என்றும் சொல்லலாம் அம்மையே!

பெண்ணரசே பெண்ணென்றால் திரியுமொக்கும்- ஒரு பெண்ணுடனே சேரவென்றாற் கூடவும் ஒக்கும் திண்ணமாக வல்லவனும் நாதனுமொக்கும் பேரைத்

திரிகூட நாதனென்று செப்பலாம் அம்மே! 34. கக்கத்தில் இடுக்குவாயோ? நின் உள்ளத்திலே இடம்பெற்ற மன்னவர் திரிகூட நாதர் என்று குறத்தி சொன்னவுடனே, மாணிக்க அணிகள் பூண்ட