பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 123

திக்கடங்காக் குளுவ சிங்கன்

திரிகூடச் சிங்கன் வந்தான்.

5. அவன் வலிமை! பறந்துவரும் வண்டுகளின் இசையொலியானது சிங்கத்தின் முழக்கத்தைப் போலக் கேட்டுக் கொண் டிருக்கும் திரிகூடத்து இறைவனுடைய நாட்டிலே ஒவ்வொரு வேளைதோறும் புகுந்து சிறந்த விளைவயல்களிலே கண்ணிகுத்திப் பறவை வேட்டைகளாடியும் நாய்போலத் தடம் பார்த்தும், பூனைபோலப் பதுங்கியிருந்தும், நரி போலப் பம்மிக் கொண்டிருந்தும், பேய்போலப் பின் தொடர்ந்து அறைந்து கொன்றும் வேட்டையாடும் 'திரிகூடச் சிங்கன்’ என்று சொல்லப்படுகின்ற குளுவன் நானே!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆளிபோற் பாய்ந்தசுரும் பிசைகேட்கும்

திரிகூடத் தமலர்நாட்டில் வேளைதொறும் புகுந்துதிரு விளையாட்டம்

கண்ணிகுத்தி வேட்டையாடி ஞாளிபோல் சுவடெடுத்துப் பூனைபோல்

ஒளிபோட்டு நரிபோல் பம்மிக் கூளிபோல் தொடர்ந்தடிக்கும் திரிகூடச் சிங்கனெனும் குளுவன் நானே. (ஆளி - சிங்கம். சுரும்பு - வண்டு. அமலர் - இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய இறைவர். விளையாட்டம் - விளை நிலம். ஞாளி - நாய். ஒளிபோட்டு - ஒளிந்திருந்து. கூளி - பேய் வகையுள் ஒன்று.) -

6. சிங்கன் நானே! தேவர்களுக்கும் அறிவதற்கு அரியவர்; அயன் அரிஅரன் ஆகிய முத்தேவர்களினும் பெரியவர்; சித்திர சபையிலே வீற்றிருப்பவர்; அவருடைய சித்திராநதி சூழ்ந்திருக்கும் கோவிலினிடத்திலும், காடுகளிலும், சோலைகளிலும் கணக்கிலடங்காக் குருவிகளைப் பிடிக்கும் குளுவன் என்று சொல்லப்படுபவனும் நானேதான்.