பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 129

மதுரையைத் தம் கைவசமாக்கிக்கொண்டு சைவத்தை அப்புறப்படுத்திய சமணர்களின் கூட்டத்தை நீண்ட கழுமரங்களிலே, ஏற்றுவதற்காக, ஆற்றிலே ஏட்டினை இட்டு அதனை எதிரேறிப் போகச் செய்த சம்பந்தமூர்த்திக்கு அந்நாளிலே முத்துப்பந்தல் வந்தாற்போல வந்து கொண் டிருக்கின்றன அப்பனே!

வெள்ளைப் புறாக்களும், சகோரப் பட்சிகளும், ஆந்தைகளும், மீன்கொத்திப் பறவைகளும், மரங்கொத்திப் பறவைகளும், கிளிகளும், பஞ்சவர்ணக் கிளிகளின் கூட் டமும், மயில்களும், நாகணவாய்ப் புட்களும், உள்ளானும், சிட்டும், வலியானும், அன்றிலும் ஆகியவை எல்லாம் தம்முள் ஆரவாரத்துடன் கூடிப் பல்வேறு பேதங்களாகத் துள்ளியோடுகின்ற சூலமும் கபாலமும் ஏந்தியவரான திரிகூடநாதரின் மனைவியாரான பிராட்டியார் அணிந்து கொண்டிருக்கும் வண்ணப் பட்டாடை போல, அணி யணியாக வந்து கொண்டிருக்கின்றன. அப்பனே! இராகம் - கல்யாணி தாளம் - ஆதி பல்லவி வருகினும் ஐயே! பறவைகள் வருகினும் ஐயே! வருகினும் ஐயே! திரிகூட நாயகர்

அனுபல்லவி வாட்டமில்லாப் பண்ணைப் பாட்டப் புறவெல்லாம் குருகும் நாரையும் அன்னமுந் தாராவும் கூழைக் கடாக்களும் செங்கால் நாரையும் (வரு)

சரணங்கள் சென்னியி லேபுனற் கன்னியை வைத்த திரிகூட நாதர்கிரிமாது வேட்கையில் மன்னன் ஒருவன் வரிசையிட்டான் கங்கை

மங்கைக்கு நானே வரிசைசெய்வேன்என அன்னை தயவுடை ஆகாச கங்கை

அடுக்களை காணப் புறப்படு நேர்த்திபோல்