பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 131

நதியினைப் போலப் பார்க்கின்ற பலப்பல திசைகளெங்கும் பறவைகள் நிரைநிரையாக வந்து இறங்குகின்றன அப்பனே!

கொச்சகக் கலிப்பா

ஈரா யிரங்கரத்தான் ஏற் றசங்கும் நான்மறையும் சீராய் இரங்கநடம் செய்தவர்க்குற் றாலவெற்பில் ஓராயிர முகமாய் ஓங்கியகங் காந்திபோல் பாரார் பலமுகமும் பட்சிநிரை சாயுதையே.

(சீராய் இரங்க - சிறப்புடன் ஒலிமுழங்க. பாரார் பல முகமும் - பார்க்க நேரும் பற்பல திசைகளிலும்)

பறவைகள் சாய்ந்து கொண்டிருக்கின்றன. அப்பனே! பறவைகள் சாய்ந்து கொண்டிருக்கின்றன! சந்தனச் சோலைக்கும் செண்பகச் சோலைக்கும், கோவில் கொண்டிக்கும் குழல்வாய் மொழியம்மையின் பேரிக்கு மாகக் குற்றால நாதரின் சிற்றாற்று வெள்ளத்தைப் போலப் பறவைகள் சாய்ந்து கொண்டிருக்கின்றன. அப்பனே!

மேகங்கள் வந்து படியும் செங்குளம், மேலப்பாட்டப் பற்று காடுவெட்டிப்பற்று, நெடிய சுண்டைப்பற்று, சிறப்புப் பொருந்திய பேட்டைக் குளத்துக்கு உரிமையுடைய காங்கேயன் ரீகிருஷ்ணன் என்பவனுக்குரிய மேட்டப் பற்று, முனிக்குருக்கள் பற்று, ஏரிவாய்ப் பற்று, சீவலப் பேரிப் பற்று, வடகால்பற்று, இராசகுலராமன் பற்று, கண்டு கொண்டான்பற்று, மேலைமாரிப்பற்று, கீழைமாரிப்பற்று, சன்னநேரிப்பற்று, சாத்தனேரிப்பற்று ஆகிய பலவகை வயற்புறங்களிலும் சுற்றிவிட்டுப் பறவைகள் வந்து சாய்கின்றன அப்பனே!

பாரைக்குளம், தென்குளம், மேல்குளம், பாண்டியன் குளம் சாட்டப் பெருங்குளம், செங்குறிஞ்சிக்குளம், ஊருணிப்பற்று, திருப்பணி நீளம், உயர்ந்த புளியங்குளம், துவரைக்குளம், மாரனேரிக் குளம், மத்தளம்பாறைக் குளம், வழிமறித்தான் பாறைக்குளம், ஆலடிப் பற்று, தலையிலே ஆத்திமாலையினை யணிந்த குற்றால நாதரின் தோட்ட