பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

மாகிய நெடியசெய், அபிஷேகப்பேரி, கணக்கன்பற்று ஆகிய பலவற்றிலும் சுற்றிப் பறவைகள் பலவும் வந்து இறங்குகின்றனவே. * ,

ஐயரான குற்றாலத்து நம்பியாரின் திருத்து, அதற்கு அப்பாலே விளங்கும் தாதன் குற்றாலப் பேரிச் செய், அழகிய புலியூர், இலஞ்சி, மேலகரம், செங்கோட்டை, சீவலநல்லூர், சிற்றம்பலம், தூயகுன்றக்குடி, வாழ வல்லான்குடி, சுரண்டையூர் முதலாக உட்கிடை என்னும் பகுதியையும் சுற்றியவாறு, கொய்யப்பட்டுத் தொடுத்த மலர்மாலையினை அணிந்த இலஞ்சிக் குமரப்பெருமான் திருவிளையாடல் செய்யும் விளைநிலப் பகுதிகளினும் பறவைகள் வந்து இறங்குகின்றனவே, ஐயனே!

இராகம் - கல்யாணி தாளம் - ஆதி பல்லவி சாயினும் ஐயே! பறவைகள் சாயினும் ஐயே!

அனுபல்லவி

சாயினும் ஐயே! பாயும் பறவைகள்

சந்தனக் காட்டிற்கும் செண்பகக் காவுக்கும் கோயிற் குழல்வாய் மொழிமங்கைப் பேரிக்கும்

குற்றால நாயகர் சிற்றாற்று வெள்ளம்போலச்(சாயினும்)

சரணங்கள் காராரும் செங்குளம் மேலப்பாட்டப்பற்று

காடுவெட்டிப்பற்று நீடுசுண் டைப்பற்று சீராரும் பேட்டைக் குளமுடைக் காங்கேயன் பூரீகிருஷ்ணன் பேரி முனிக்குரு கன்பேரி ஏரிவாய் சீவலப் பேரி வடமால்

இராசகுல ராமன்கண்டுகொண்டான்மேலை மாரிப்பற்றும்கீழை மாளிப்பற்றும்சன்ன

நேரிப்பற்றும்சாத்தனேரிப்பற்றும் சுற்றிச் (சாயினும்) பாரைக் குளந்தெற்கு மேல்வழு திக்குளம்

பாட்டப் பெருங்குளம் செங்குறிஞ்சிக் குளம்