பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

பகைவரும் பணிந்து போற்றுபவனுமாகிய பிச்சைப் பிள்ளையின் வயல்களிலெல்லாம் பறவைகள் வந்திறங்கி மேய்கின்றனவே. (3)

நல்ல நகரங்களையும் ஊர்களையும் உண்டாக்கியும் சாலை அமைத்தும், மடங் கட்டியும், சோமாஸ்கந்தர் கோவிற் கொலு மண்டபத்தைக் கட்டியும் மிக்க பரமானந்தமாக விளங்கும் தென்னை மரத் தோப்புகளை உண்டாக்கியும், தெப்பக்குளம் கட்டியும், தேர்மண்டபம் கட்டியும், அனைவரும் புகழும் திரிகூடத்து அம்பலமான சித்திர சபையைக் கட்டியும், பசுத்தொழுக்கள் அமைத்தும், மற்றும் வேண்டும் நல்ல திருப்பணிகளெல்லாம் கட்டியும் அந்த நாளிலே தர்மக்களஞ்சியம் கட்டும் அனந்த பத்மநாபன் என்பவன் விட்ட கட்டளைப் பற்றுகளிலெல்லாம் பறவைகள் வந்து இறங்கி மேய்கின்றனவே. (4)

மன்னன் கிளுவையிற் சின்னணஞ் சேந்த்ரன் வடகரை வீட்டுக்கு மந்திரி யாகவும் செந்நெல் மருதூர்க்கு நாயக மாகவும்

தென்காசி ஊருக்குத் தாயக மாகவும் தன்னை வளர்க்கின்ற குற்றால நாதர்

தலத்தை வளர்க்கின்ற தானிக னாகவும் நன்னகர்க் குற்றாலத் தந்தாதி சொன்னவன்

நள்ளார்தொழும்பிச்சைப் பிள்ளை திருத்தெல்லம்(மே) நன்னகர் ஊர்கட்டிச் சாலை மடங்கட்டி

நாயகர் கோவிற் கொலுமண்ட பங்கட்டித் தென்ன மரம்பர மானந்தத் தோப்பிட்டுத்

தெப்பக் குளங்கட்டித் தேர்மண்ட பங்கட்டிப் பன்னுந் திரிகூடத் தம்பலங் கட்டிப்

பசுப்பிரை கோடி திருப்பணி யுங்கட்டி அந்நாளில் தர்மக் களஞ்சியம் கட்டும்

அனந்த பத்மநாபன் கட்டளைப் பற்றெல்லாம் (மே) தன் தந்தையான பிச்சைப் பிள்ளையவர்கள் முன்னே கட்டிய அம்பலத்துக்கும், தருமத்துக்கும் நிலைக்கண்ணாடி