பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 137

போலவே விளங்கியவன் மன்னன் வயித்தியநாதன். எம் தந்தையாராகிய குற்றாலநாதர் கோவிலின் வாசலிலே பிள்ளையார் செய்வித்தவன் அவன். இரண்டு குறிஞ்சிப் படித்துறைகளையும் கட்டுவித்தவன். பூமாலைகள் அணிந்த தோள்களையுடைய இராக்கதப் பெருமாள் பிள்ளை குற்றாலநாத பிள்ளை ஆகியவர்களுக்கு மூத்த சகோதரன் அவன். எவராலும் வணக்கம் செலுத்தும் தகுதியுடைய சங்கு முத்துப்பிள்ளையின் மைத்துனன். அவனுடைய வயல்களில் எல்லாம் பறவைகள் வந்து மேய்கின்றனவே ஐயனே!

யாவர் மேலும் வருகின்ற துன்பத்தையும் போக்கு பவன்; அடங்காதவர்களுடைய குறும்புகளை எல்லாம் அடக்கி மக்களைக் காப்பவன், தென்காசி ஊரிலே உயர்ந்த மனுநீதியினை நிலைநிறுத்தியவன்; தன்னை அடியவனாக உடையவரான குற்றாலநாதருக்குப் பூசை நைவேத்தியங் களும், தேர்மேல் திருநாளும், தெப்பத் திருநாளும், சித்திர மண்டபம், சத்திரம், சாலைகளும் மற்றும் பலவும் உலகத்திலே வளம்பெற அமைத்த அனந்த பத்மநாபனின் குமாரனான வயித்திய நாதனின் வயல்களில் எல்லாம் பறவைகள் வந்து மேய்கின்றனவே, ஐயனே!

தந்தைமுன் கட்டின அம்பலத் துக்கும்

தருமத் துக்கும்நிலைக் கண்ணாடி போலவே எந்தையார் வாசலிற் பிள்ளையார் செய்வித்து

இரண்டு குறிஞ்சிப் படித்துறை யுஞ்செய்த கொந்தார் புயத்தான் இராக்கதப் பெருமாள்

குற்றால நாதன்முன் உற்ற சகோதரன் வந்தனை சேர்சங்கு முத்துதன் மைத்துனன்

மன்னன்வயித்திய நாதன்திருத் தெல்லாம் (மே)

ஆர்மேல் வருகின்ற துன்பமும் நீக்கி -

அடங்கார் குறும்பும் அடக்கியே தென்காசி ஊர்மேல் உயர்ந்த மனுநீதி நாட்டி

உடையவர் குற்றாலர் பூசைநைவேத்தியம்