பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 5

சுளையெலாம் சிவலிங்கம் வித்தெலாம்

சிவலிங்க சொரூபம் ஆக விளையுமொரு குறும்பலவின் முளைதெ ழுந்த

சிவக்கொழுந்தை வேண்டு வோமே. (சிவலிங்க சொரூபம் கொழுந்து எனப்பட்டது. குறும் பலவின் பகுதியனைத்துமே சிவலிங்க சொரூபமாகத் திகழ்ந்த போதினும், அவற்றினுக்கும் மேலாக, அன்பர்களுக்கு வாழ்வு அளிக்கும் பெருங்கருணைப் பெருக்கினாலே சுயம்புலிங்க வடிவமாக இறைவனும் எழுந்தருளினன். அவனை வேண்டுவோம்! அவன் நமக்கு அருள்வான் என்கிறார் கவிஞர். சதுர்வேதம் - நான்கு வேதங்கள்; நான் மறைகள் இருக்கு முதலியன என்பர். “பண்டாய நான் மறைகள்’ என்னும் பழைய தமிழ் மறைகள் என்பதும் உண்டு)

4. குழல்வாய்மொழியைக் கூறுவோம் வெண்ணிலவு தவழ்ந்து செல்லுகின்ற மலையுச்சிகளை யுடையது பனிமூடிக் கிடக்கும் பெருமலையாகிய இமயம். அதன்கண் தோன்றி வளர்ந்தவள் உமையம்மை. சிறந்த தகைமைகள் அனைத்துமே சேரப் பெற்றவனும் முக்கண் களை உடையவனும் பவள மலையைப் போன்று செம்மேனிப் பெம்மானாக விளங்குபவனுமாகிய சிவபெருமானிடத்தே நாளும் ஆசை படர்ந்து ஏறிக் கொண்டே இருந்தவள் அவள். அந்த ஆசையானது முகிழ்த்துப் பின் பருவமும் ஆகித், தேன் சொரியும் அழகிய கடப்ப மலர்மாலை அணிந்த குமரப் பெருமானையும், ஒற்றைக் கொம்பினையுடைய யானைமுகப் பெருமானையும் பெற்றவள் அவள். இவ்வுலகம் அனைத் தையும் ஈன்றருளிய உலக மாதாவும் அவளேயாவாள். அத்தகைய கொடி போன்றவளாகிய குழல்வாய்மொழி அம்மையின் புகழினையும், இந்நூல் இனிது நிறைவேறுமாறு நாம் பேசுவோமாக,

தவளமதி தவழ்குடுமிப் பனிவரையின்

முளைத்தெழுந்து தகைசேர் முக்கண் பவளமலை தனில்ஆசை படர்ந்தேறிக்

கொழுந்துவிட்டுப் பருவம் ஆகி