பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

குலைந்த கண்ணியைத் திருத்திக் குத்தடா

குற்றால மலைமேல் - குளுவா குற்றால மலைமேல். 4 (கண்ணி குத்துதல் - கண்ணியை வசமாகப் பூமியிலே பதித்து வைத்தல். அதற்குப் பல முளைகளை அடித்து வைப்பது வழக்கம்.) 17. சிங்கியை நினைத்தல் தேன் சொரிந்து கொண்டிருக்கும் கொன்றைப் பூவாலான அழகிய தாரினை அணிந்த தலைவரான திரிகூடநாதருக்கு உரிமையுடைய மலைச் சாரலிலே இளம் பிறையைப் போன்ற ஒளி உடைய நெற்றியை உடைய வளான என் சிங்கியானவள் என்னுடன் பேசாத ஆற்றாமை யானது அடங்குமாறு, துள்ளி, அவள் மடிமேலே ஏறியிருந்து அவள் தோளின்மேல் ஏறி, அவள் பேசும் கிளி மொழியைக் கேட்டு இன்புறுவதற்கு நானும் ஒரு கிளியாகவாவது ஆயினேன் இல்லையே? என்ன செய்வேன்!

கொச்சகக் கலிப்பா கள்ளுலவு கொன்றையந்தார்க் கர்த்தர்திரி கூடவெற்பிற் பிள்ளைமதி வாள்நுதலாள் பேசாத வீறடங்கத் துள்ளிமடி மேலிருந்து தோளின்மேல் ஏறியவள் கிள்ளைமொழி கேட்கவொரு கிள்ளையா னேனிலையே.

(பிள்ளைமதி - மூன்றாம் பிறை. வீறு - ஆற்றாமை. கிள்ளைமொழி - குதலைச் சொற்கள்.)

18. உரத்துப் பேசாதிரு! உரத்துப் பேசாதே, ஐயே! கொஞ்சம் பொறு. உரத்துப் பேசாதே அப்பனே! நம்முடைய இறைவர் குற்றாலநாதர். அவருடைய அருள் பெற்ற வயல்களிலே வீழும் பறவை களைப் பிடிக்கையிலே புதிதாக வந்து வாய்த்த உன்னுடைய சத்தத்தைக் கேட்டதனால் அல்லவோ கண்ணிக்கருகே வந்த குருவிகள் எல்லாம் கலைந்து ஒடிப்போகின்றன. அதனால் சத்தம் போடாதே, ஐயனே! -