பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 147

ஆலாவும் கொக்கும் அருகே வருகுது

ஆசாரக் கள்ளர்போல் நாரை திரியுது வேலான கண்ணியர் ஆசையி னாற்கீழும்

மேலுந் திரிந்திடும் வேடிக்கைக் காரர்போல் காலால் திரிந்து திரிந்து திரிந்தெங்கள்

கண்ணிக்குள் ளாகும் பறவையைப் போகட்டுப் பாலாறு நெய்யாறு பாய்கின்ற ஓட்டத்திற்

பல்லாடிக் கச்சிறு கல்லகப் பட்டாற்போல் (கெம்) (ஒரு துலுக்கன் குதிரைமீது வந்து அதன் குளம்புகள் பாறையிலே ஒட்டிக்கொண்டதையும், அதனால் அந்தப் பாறையே

அடியோட்டுப் பாறை என வழங்கும் எனவும் கூறுவர். போகட்டு - போகவிட்டு) سمبر

19. நூவனை ஏவினான்

எம் குற்றாலநாதரின் தேவியாகிய குழல்வாய்மொழிப் பெண் அம்மைக்குரிய நாச்சியார்கால், செண்பகக்கால், அழகான மதிசூடினார்கால், காவிவயல் வெண்ணமடை, தட்டான் பற்று, கள்ளி குளம், அழகர் பள்ளம், கூத்தன் மூலை ஆகிய நீர்நிலைகள் தோறும் நின்று சிங்கன், பறவை வேட்டையாடினான். அதன்பின் வடவருவி ஆற்றுக்கால், வடகால், தென்கால், கோவில் விளையாட்டம் ஆகிய இடங்களிலும் கண்ணி குத்திவிட்டு நூவனைக் கூவினான். அவற்றுள் அகப்பட்டிருக்கும் பறவைகளைப் பிடித்து வருமாறு அவனை ஏவினான்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தேவிகுழல் வாய்மொழிப் பெண்நாச்சி யார்கால் செண்பகக்கால் திருந்தமதிசூடினார்கால்

காவிவயல் வெண்ணமடை தட்டான் பற்றுக்

கள்ளிகுளம் அழகர்பள்ளம் கூத்தன்மூலை

வாவிதொறும் நின்றுசிங்கன் வேட்டை யாடி

வடவருவி ஆற்றுக்கால் வடகால் தென்கால்