பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

அவிழுநறைப் பூங்கடப்பந் தாமரையும்

ஈன்றுஒருகோட் டாம்பல் ஈன்று குவலயம் பூத்து அருள்கொடியைக் கோதைகுழல்

வாய்மொழியைக்கூறு வோமே.

(முக்கண் - சிவபெருமானின் மூன்று கண்கள். ஞாயிறும் திங்களும் நெருப்புமே சிவனின் முக்கண்களாக விளங்குவன என்பர். அம்மை பர்வதராசன் புத்திரியாகத் தோன்றியமையால், ‘பனி வரையின் முளைத்தெழுந்து என்றனர். தகைமை - குணங்கள்; எண்குணத்தான் எனக் குறள் கூறும் எட்டுவிதத் தகைமைகள். 'ஆசைபடர்ந்து ஏறுதலாவது, ‘காதல் தோன்றி நாளுக்குநாள் மிகுதியாகப் பெருகிக் கொண்டு போதல். நறைதேன். அவிழ்தல் - இங்கே, சொரிதல். தாமரை - தாமத்தையுடைய வரையையும், முருகனையும் குறிக்கும். ஆம்பல் - அல்லியையும், யானையையும் குறிக்கும், அம்மையைக் கொடி’ என்றதற்கேற்பப், பவள மலையிலே ஆசையுடன் படர்ந்தேறித், தாரையும், அல்லியும் பூத்து’ என்று இனிமைச் செறிவுடன் கூறினர். இறையவன், ஊழிக்காலத்து அனைத்தையும் தன்னுள் ஒடுக்குவன். பின் சக்தியை இயக்கியே மீண்டும் தனுகரண புவன போகங்களை எல்லாம் படைப்பன். அதனால், அந்த அருள்சக்தியே உலகத்தை ஈன்ற அருள் மாதாவுமாகிறாள். இதுபற்றியே, 'குவலயம் பூத்து அருள் கொடியை என்கின்றனர் கவிஞர்.)

- 5. மூவர் வணக்கம்

தன்னுடைய தலையின் மீதிலேயே கங்கையாகிய ஆறானது இருக்கவும், தன் மாமியாராகிய காஞ்சனமாலை அம்மையின் விருப்பத்திற்கு இணங்கப், பெரிய சப்த சமுத்திரங் களையுமே அழைத்துத் தந்த சிறப்புடையவர் திருக்குற்றால நாதர். அவருடைய மலையினும் பருத்த அகன்ற தோள்களை வாழ்த்திச் செழுமையான இக்குறவஞ்சி நாடகத்தைப் பாடமுனைகின்றோம். கடலிலே கல்லும் மிதக்க அதன்மீது ஏறியமர்ந்து கரைசேர்ந்தவர் திருநாவுக்கரசுப் பெருமான். எலும்பிலேயிருந்த பூம்பாவை என்ற பெண்ணை அந்நாளிலே உயிர்ப்பித்து எழுப்பியவர் திருஞானசம்பந்தப் பெருமான். தன்னுடைய பதிகம் பாடுங் கலையினாலே கிடைத்த