பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

காதலாய்க் கண்ணிவைத்துப் பறவைக்குக்

கங்கணங் கட்டி நின்றேன் ஏதோ ஒரு பறவை தொடர்ந்துவந்

தென்னைக் கடிக்குதையோ! 4 (ஏதோ ஒரு பறவை தொடர்ந்து வந்து கடிக்குது என்றது, அவன் சிங்கியைக் காணாது படும் காமவேதனையை மறை முகமாகக் கூறியது)

21. பிரேமை கொண்டான் உயிரினம் அனைத்துக்கும் காவலராக விளங்கும் குற்றால நாதரின் திரிகூட மலைச்சாரலிலே, சிங்கன் காமத்தால் மிகவும் கலங்கிவிட்டான். தன் அருகே வந்த நூவனைப் பழித்துப் பேசினான். அதன்பின் வேட்டைக் காட்டை ஒருமுறை நோக்கினான்.அங்கே,ஆசைமிகுந்த காமவேட்டை ஆடுகின்ற ஆசையினாலே அன்னப் பேட்டினை ஒர் அன்னச் சேவலானது போய்ப் புணர்வதைக் கண்டான். கண்டதும் தன் சிங்கியின் மேல் மிகவும் பிரேமை கொண்டான். -

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் காவலர்திரிகூடத்தில்

காமத்தால் கலங்கி வந்த நூவனைப் பழித்துச் சிங்கன்

நோக்கிய வேட்டைக் காட்டில் ஆவல்சேர் காம வேட்டை

ஆசையால் அன்னப் பேட்டைச் சேவல்போய்ப் புணரக் கண்ட்ான்

சிங்கிமேற் பிரமை கொண்டான்.

22. சிங்கன் புலம்புதல் கலவிக் காலத்தே எழுகின்ற எட்டு வகையான புட் குரல்களுள் ஒரு குரலைப் போலக் கூவுகின்ற புறாவே! எனது ஏகாந்தத்திற்கு உரியவளான சிங்கியை நோக்கிக் கூவாதது தான் என்ன கூவுதலோ? மணம் பொருந்திய கூந்தலுடை யாளின் சாயலைக் காட்டுகின்ற மயிலே! அவளுடைய சிறந்த