பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

முளைத்தெழுந்த சிவலிங்க சொருபராகவும் திகழ்பவர். அவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட குறவஞ்சித் தமிழ் நாடகத்தை நிகழ்த்த வேண்டும். அதற்கு, முத்தராகிய சிவபெருமானின் திருமேனி முழுவதுமே உருகுமாறு, முன்னாளிலே தமிழ் உரைத்த முனிவராகிய அகத்தியரின் புகழினைப் பாடுவோம். இந்நிலவுலகிலே ஆத்துமாவைப் போகவிட்டு இறந்து போகின்ற இறுதிநாளிலே, சிலேட்டுமம் வந்து பற்றிக்கொள்ளாத வண்ணம் பித்தனாகிய சிவ பெருமானின் அடிகளைத் துணையாகச் சேர்ந்தவர் வாதவூரார் ஆகிய மணிவாசகப் பெருமான். அவருடைய திருவடிகளையும் நாம் போற்றுவோம்.

நித்தர்திரி கூடலிங்கர் குறவஞ்சி

நாடகத்தை நிகழ்த்த வேண்டி முத்தர்திரு மேனியெல்லாம் உருகவே தமிழுரைத்த முனியைப் பாடி இத்தரையில் ஆத்துமம்விட்டிறக்கும்நாள்

சிலேட்டுமம் வந்து ஏறாவண்ணம் பித்தனடித் துணைசேர்ந்த வாதவூ ராண்டிகள் பேணு வோமே.

('வாதவூரான்’ என மணிவாசகரைக் குறித்ததற்கேற்ப, வாதத்திற்கு இனமாகிய பிற பித்த சிலேட்டுமங்களையும் நயம்பட உரைத்துள்ளனர். சிலேத்துமம் ஏறாமலிருக்கப் பித்தாதிக்கத்தை மிகுக்கும் மருத்துவ விதியும் காண்க. முத்தர் - சிவபெருமான். ஆத்துமம். 'உயிர் போகும் நாளிலே உயிர் அவதியுறாவண்ணம் சிவபெருமானின் திருவடித்துணை சேர்ந்தவர் மணிவாசகர்’ என்க.)

7. ஞானக்கொடிதனை இயம்புவோம் இணைந்திருக்கின்ற தன்னுடைய இரு திருவடி மலர்களும், சிவந்த வாயாகிய அல்லி மலரும் செந்நிறமாகப்

பெற்று விளங்குபவள். நீண்ட அழகிய கூந்தலும், மை தீற்றிய கண்களாகிய குவளை மலர்களும் கரிய நிறமாகப் பெற்