பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

உடையவன்; நிர்வாணன். ஆதி மறை - ஆதிவேதம். முன்னவன் - முற்பட்ட முதல்வன்.)

47. வாழி நீடுழி! 'கச்சு என்றும் பொருந்தியிருக்கின்ற தனபாரங்களை உடையவள் குழல்வாய்மொழி அம்பிகை; அவள் வாழ்க! அவளை மணக்க இறைவன் சூட்டிய மலர்மாலை வாழ்க! திரிகூடத்து மக்கள் அனைவரும் வாழ்க! குறுமுனியாகிய அகத்தியன் முன்னாளிலே சொன்ன பேராகிய குற்றால நாதர் என்னும் திருநாமம் வாழ்க! அரசர்களின் முறை தவறாத செங்கோலாட்சி வாழ்க! நல்ல நகரம் என்ற பெயருடன் சிற்பபுற்று விளங்கும் குற்றாலமாகிய ஊரும் வாழ்க! குற்றாலத்தின்பால் அன்புடைய அடியவர்கள் அனைவருமே நீடுழி வாழ்க! வாழ்க!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வார்வாழும் தனத்திகுழல் வாய்மொழியாம்

பிகைவாழி! வதுவை சூட்டும் தார்வாழி! திரிகூடத் தார்வாழி!

குறுமுனிவன் தலைநாட் சொன்ன பேர்வாழி! அரசர்கள்செங் கோல்வாழி!

நன்னகரப் பேரால் ஓங்கும் ஊர்வாழி! குற்றாலத் தலத்தடியார்

வாழிநீ டுழி தானே! (வார் - கச்சு. தனத்தி - தனங்களை உடையவள். வதுவை - மணம். தார் - மாலை. திரிகூடத்தார் - திரிகூடப் பதியினரான வடகரை அரசர்களும் ஆம். 'குறுமுனிவன் தலைநாட் சொன்ன பேர் குற்றலா!' என்பது)

திருக்குற்றாலக் குறவஞ்சி நாடகமும் புலியூர்க் கேசிகன் தெளிவுரையும்

முற்றுப்பெற்றன.