பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 15

மான்மறி, வள்ளலார் - வள்ளன்மை உடையவர்; சிவபெருமான். திருமாலாயிருந்தவர் சிவனாகிக் காட்சியளித்ததைக் குறிப்பது. சீர் - சீர்மை, தேக்குதல். மிக்குப் பெருகித் தேங்கி இருத்தல். ‘மறை நான்கும் சிலம்பெழுந்த பாதர் - எழுதரிய மறைச் சிலம்பு கிடந்து புறத்தலம்ப என்பார் பிறரும். மேக்கு எழும் மதி; மூன்றாம் பிறை. அது மணங்கொள்ளும் வளர்பிறைக் காலம் என்பதும் இதனால் உணரலாம்.) -

3. பவனி வந்தனரே!

பவனி வருகின்றனர்; இளமை பொருந்திய விடையின் மீது ஏறி, அதோ நம் இறைவன் பவனி வருகின்றனர்.

உலகத்தவரெல்லாம் போற்றிய பெருமான்; குறும் பலாவின் அடியிலே வீற்றிருக்கின்றவன், மவுனநாயகனாகவும்: எவன நாயகனாகவும் விளங்குபவன், சிவனுமாகவும்: அரியுமாகவும், அயனுமாகவும் விளங்கும் ஏக மூர்த்தி! விரைந்து செல்லுகின்ற எருதின்மீது ஏறியவனாக, இதோ பவனி வந்து கொண்டிருக்கிறார்! -

தேவர்களின் கூட்டமும், முனிவர்களின் கூட்டமும், அசுரர்களின் கூட்டமும், மனிதர்களாகிய தொண்டர்களின் கூட்டமும், அனைத்துமே கண் இமைப்பில்லாதவராயினர் போலும் எனச் சொல்லும்படியாக, ஒருவரோடொருவர் கலந்து தனித்தனியே மயக்கம் உடையவராயினர். தொன்மை யாக வரும் மக்களினத்தவர் இவர், தேவர்கள் இனத்தவர் இவர் என, நந்திப் பெருமான் அவர்களை மீண்டும் மீண்டும் பகுத்துப் பகுத்துத் தனித்தனியே நிறுவினன். அவ்வேளை களிலே எல்லாம், ஆர்வத்தால் அவ்வப்பகுதிகட்குள் அடங்காது, இறைவனைத் தரிசிக்க முனைந்து வரும் அரசர்களை, நந்தி பிரம்படியினால் புடைத்து ஒதுக்க, அவ்வடிகள் அவர்களின் மகுட கோடிகளிலே பட்டு அவரை வருத்தும். இவ்வண்ணமாகக் குற்றால நாதர் இதோ பவனி வந்து கொண்டிருக்கின்றனர்!