பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

இராகம் - பந்துவராளி தாளம் - சாப்பு பல்லவி

பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே. அனுபல்லவி

அவனி போற்றிய குறும்ப லாவுறை மவுன நாயகர் எவன நாயகர் சிவனு மாயரி அயனுமானவர்

கவன மால்விடை அதனில் ஏறியே. (பவனி)

சரணங்கள் அண்டர்கூட்டமும் முனிவர் கூட்டமும் அசுரர்கூட்டமும் மனிதர் ஆகிய தொண்டர் கூட்டமும் இமைப்பி லாரெனச்

சூழ்ந்து தனித்தனி மயங்கவே பண்டை நரரிவர் தேவர் இவரெனப்

பகுத்து நிறுவிய வேளை தொறுந்தொறும் மண்ட லீசரை நந்தி பிரம்படி

மகுட கோடியிற் புடைக்கவே. (பவனி) (பவனி - உலா, மழவிடை - இளையதான ஏறு - அவனி - உலகம். மவுன நாயகர் - சிவதவசி. எவன நாயகர் - இளமைக்கு நாயகமாகத் திகழ்பவர். கவன மால்விடை - விரைந்த செலவினை யுடைய ஆனேறு. அண்டர் - தேவர்கள், சுரர், அசுரர் - சுராபானம் செய்யாதவர். தேவர்களின் நிரந்தரப் பகைவர். இமைப்பிலார் - இமைத்தலில்லார்; எண்ணுதற்கு அரிய திரளினார் எனவும் கூறலாம். சூழ்தல் - ஒருவரோடு ஒருவர் நெருங்கிக் கலத்தல். பண்டைநரர் - தொன்மையினையுடைய நரர். மண்டலீகர் - மண்டலங்கட்கு அதிபர்கள். மகுடகோடி - மகுடங்களின் பெருக்கம். புடைத்தல் - அடித்தல்)

(2) அடியார்களுக்கு அல்லல் வாராது தடுத்துக் காப்பது ஒரு கை அடியார் வேண்டுவனவற்றைத் தந்து கருணை ப்ாலிப்பது ஒரு கை தாம் தரித்த ஒளியுடைய மழுப்படையை உயர்த்தி மேலே கொண்டது ஒரு கை, தாம் தாங்கும் சிறு