பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 27

ப. வசந்தவல்லியின் காதல்

1. வசந்தவல்லி வந்தாள் பொன்போலும் அணி செய்வதாகிய பொட்டினை நெற்றியிலே தீட்டிக் கொண்டாள்; கூந்தலிலே அழகிய மலர் மாலையினைச் சூட்டிக் கொண்டாள்; அழகிற் சிறந்த மோகினியைப் போலத் தன்னை அழகுறப் புனைந்து காட்டிக் கொண்டாள். நன்மையுடைய குற்றால நகரத்துப் பெருமானின் முன்னர்ச் சென்று, தம் நாணமும் ஆடையும் இழந்து நின்ற கன்னியர்களுக்குத் தானும் ஒரு துணை யாவாள் போலக் காட்டிக் கொண்டவளாக, ஆடவர்கள் பகுதி எங்கணுமே காமவேளின் கலகச் செயலை மூட்டி விடுபவளே போல, வசந்தமோகினி என்பவள், தன் வீட்டினின்றும் புறப்பட்டு வெளியே தெருவில் வருவாளாயினாள்.

விருத்தம் நன்னகர்ப் பெருமான் முன்போய் நாணமும் கலையும் தோற்ற கன்னியர் சதுப்போற் காட்டிக்

காமவேள் கலகம் மூட்டிப் பொன்னணித் திலகம் தீட்டிப் பூமலர் மாலை சூட்டி வன்னமோ கினியைக் காட்டி

வசந்தமோ கினிவந்தாளே. (கலை - ஆடை, சது - உதவி. சதுப்போல் - உதவிபோல; அதாவது அவளும் துணையாவாள் போல, காமவேள் - மன்மதன். வன்ன மோகினியைக் காட்டி - அழகுள்ள மோகினிப் பெண் கண்டாரைத் தன் பேரழகால் கவர்ச்சித்து அவர் உயிரை வருத்துவாள் என்பர்; அவள்போலக் காட்டி என்க. 'அணங்கு