பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

பல்லின் அழகைஎட்டிப் பார்க்கும்

மூக்கிலொரு முத்தினாள் மதி பழகும் வடிவுதாங்கி அழகு

குடிகொளும் முகத்தினாள். வில்லுப் பணிபுனைந்து வல்லிக்

கமுகைவென்ற கழுத்தினாள் சகம் விலையிட் டெழுதியின்ப நிலையிட்

டெழுதுந் தொய்யில் எழுத்தினாள். 3 கல்லுப் பதித்ததங்கச் செல்லக்

கடகம்இட்ட செங்கையாள் எங்கும் கச்சுக் கிடக்கினும்தித் திச்சுக்

கிடக்குமிரு கொங்கையாள். ஒல்லுங் கருத்தமர்மனக் கல்லுஞ்

சுழிக்குமெழில் உந்தியாள் மீதில் ஒழுங்கு கொண்டுளத்தை விழுங்குஞ்

சிறிய ரோம பந்தியாள். 4 (மூக்கிலொருமுத்து - புல்லாக்கு. மதிபழகும் வடிவு - முழுமதியும் வடிவினைப் பார்த்துப் பார்த்துத் தானும் அங்ங்னம் அமைத்துக் கொள்ள வேண்டுமெனப் பழகுவதற்குரிய ஒப்பற்ற வடிவு. வல்லி - கொடி வல்லிக் கமுகு - கொடி படர்ந்த கமுகு, ‘சகம் விலையிட்டெழுதி இன்ப நிலையிட்டெழுதி என்பன. சகம் முழுவதற்கும் அது மேலானதெனவும் இன்ப நிலையினுக்கு ஒர் உறைவிடமானது எனவும் காட்டும்.

கடகம் - ஒருவகைக் கையணி. எங்கும் கச்சுக் கிடக்கினும் தித்திச்சுக் கிடக்கும் - எவ்விடத்தும் கைத்துக் கிடந்தாலும் அவ்விடம் மட்டும் தித்திச்சுக் கிடக்கும் எனவும் உரைக்கலாம். கருத்தர் - இறைவன். மனக்கல்லும் - கல்மனமும், ரோமபந்தி - உரோம ஒழுங்கு)

(5) உடுக்கையின் நடுவிலேயுள்ள குறுகிய பகுதியானது பெண்களின் இடையின் நுண்மைக்கு உவமையாகக் கூறப் படும். அதற்கும் உள்ளடங்கிய மிக நுண்மையான இடை யினையும் உடையவள் அவள். ஒரு கைப்பிடிக்குள்ளே