பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 35

படியாக, நாலடி தூரம் முன்னுக்குத் தாவியும், பத்தடி தூரம் பின்னுக்கு வாங்கியும், அவள் ஒய்யாரமாகப் பந்தாடினாள்.

வித்தகர் திரிகூடத்தில் வெளிவந்த வசந்தவல்லி தத்துறு விளையாட்டாலோ தடமுலைப் பணைப்பினாலோ நத்தணி கரங்கள் சேப்ப நாலடி முன்னே ஓங்கிப் பத்தடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின்றாளே.

(திரிகூடம் - மூன்று மலை முடிகளையுடைய இடம். இப்பகுதியை அரசாண்ட குறுநில மன்னர்கள் திரிகூடப் பதிகள் எனப்படுவதும் காண்க. தத்துறுதல் - தாவுதல், பணைப்பு - பூரிப்பு. நத்து - சங்கம். ஓங்குதல் - முன்போதல். வாங்குதல் - பின்போதல், இவள் விளையாடிய பந்து இந்நாளிலே நாம் உந்துபந்து (வாலிபால்) என்கிறோமல்லவா அதுபோன்ற வோர் பந்து விளையாட்டுப் போலும். கைகள் சிவக்க, அவள் பந்தடித்தனள் என்பதனால் அங்ங்னம் உய்த்து உணரலாம்.)

5. பந்தாடிய சிறப்பு

அப்படி, வசந்தவல்லியானவள் பந்தடிக்கும்போது அவளுடைய செங்கைகளிலேயுள்ள வளையல்கள் கலீர் கலீர் என்றும், செயம் செயம் என்றும் ஒலி முழங்கின. இடைஇனி நிலைத்திருப்பதே சந்தேகந்தான் என்று சிலம்புகள் புலம்பிக் கொண்டிருக்க, அவற்றுடன் தாமும் கலந்து புலம்புவது போலத் தன்டைகளும் சேர்ந்து ஒலி முழங்கின. அவளுடைய இரு கொங்கைகளும் வடிவமைதியிலே தம்மைப் போன்று விளங்கும் கொடிய எதிரியான பந்தினை வென்று விட்டோம்' என்று குதுகலிப்பன போலக் குழைந்து குழைந்து குதித்து ஆடிக் கொண்டிருந்தன. இப்படியாக, மலர்களையுடைய பசுங்கொடி போல விளங்கும் நங்கையான, வசந்தவல்லி என்னும் அந்த அழகியானவள் பந்தடித்துக் கொண்டிருந்தாள்.

மிகவும் பெரிய காதணிகளோடு நெருங்கிய கயல்மீன் களையொத்த விழிகள் இரண்டும் புரண்டு புரண்டு ஆடிக் கொண்டிருந்தன. மேகம் போன்ற கூந்தலிலே மொய்த்துக் கொண்டிருந்த வண்டுகள் கலைந்து போதலைக் கண்டு,