பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

இராகம் - காம்போதி தாளம் - ஆதி பல்லவி பந்தடித்தனளே வசந்த சுந்தரி -

விந்தையாகவே (பந்)

அனுபல்லவி

மந்தர முலைகள் ஏசலாட

மகரக் குழைகள் ஊச லாடச் சுந்தரவிழிகள் பூசலாடத்

தொங்கத் தொங்கத் தொங்கத் தொம் மெனப் (பந்)

சரணம் பொன்னின் ஒளிவில் வந்து தாவிய மின்னின் ஒளிவு போலவே சொன் னயத்தினை நாடி நாடித்

தோழியருடன் கூடிக் கூடி நன் னகர்த்திரி கூடம் பாடி

நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம்மெனப் (பந்) (பொன்னின் ஒளிவடிவினராகத் தோழியரையும் அவரி டையே சொன்னயத்தினை வந்து நாடிக் கூடும் வசந்த வல்லியை மின்னின் ஒளியினளாகவும் உவமித்த உவமையின் நயம் காண்க. சொன்னயம் - சொல்லாடிப் பெறுகின்ற இன்பம்)

8. நாதனை எதிர் கண்டாள்! தொண்டர்களின் கூட்டம் நிரம்பியிருக்கின்ற அந்தச் சங்க வீதியிலே அந்த வசந்தவல்லியானவள் அப்படியாக வந்தனள். அவள் குதிகால்களாகி இரு பந்துகளும் தாவித்தாவி ஆடுவன போலக் குதியிட்டு வந்தன. அவள் நடக்கும் பொழுது இரு பந்துகள் போன்ற முலைகளுமோ அவள் நடையின் அசைவிற்கு ஏற்பத் தரமும் குதித்தாடின. தான் ஆடிய ஒரு பந்தினைக் கையிலே கொண்டாடியவளாக அவளும் வந்தாள். செப்புப் பதுமைபோன்ற அவளிடத்தே அப்படியாக ஐந்து பந்துகளும் தெளிவுகொண்டு ஆடும் வண்ணம் வித்தையாடு