பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

எள்ளள ஆணும் உறக்கமும்

இல்லாரைக் கண்டு - நானும் ஒள்ளிய ஊணும் உறக்கமும்

அற்றுவிட் டேனே! 5 (இக் கண்ணியுள், வெள்ளி, வியாளம், திங்கள், ஞாயிறு ஆகிய கிழமைப் பெயர்கள் சுவையாக விளங்குதல் காண்க. வெள்ளி - வெண்மை, வியாளம் - பாம்பு)

22. பாங்கி பழித்தல்

தரையின் மீதுள்ள பெண்களுக்கெல்லாம் ஆபரணம் போல வந்து தோன்றிய எங்கள் பொற்கொடியே! மாதர்

's களுக்குத் தலைவியாக விளங்குபவளே! வசந்தவல்லியே! இதுகாறும் நீ சொன்ன பேதைமையான சொற்களுக்கு நான் என்ன பதில் சொல்லப் போகின்றேன்? மலைமகளின் மீது ஆசை கொண்டவராக மக்கட் கூட்டம் பெருகியிருக்கின்ற வீதியின் ஊடே நரைத்த மாட்டின்மீது ஏறி வருகின்றாரே! இப்படி வருபவருக்கோ, அழகு நங்கையான நீ மையல் கொண்டனை? அதனை இப்பொழுதே விட்டுவிடுவாயாக!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தரைப்பெண்ணுக்கு அணிபோல் வந்த

தமனியக் கொடியே மாதர் துரைப்பெண்ணே வசந்த வல்லி - சொன்னபே தைமைக்கென் சொல்வேன்

வரைப் பெண்ணுக்கு ஆசை பூண்டு

வளர்சங்க மறுகின் ஊடே நரைத்தமாடு ஏறு வார்க்கோ

நங்கைநீ மயல் கொண்டாயே! (வரைப்பெண் - இமவானின் மகள்; இங்கே குழல்வாய் மொழி என்ற நாமம் உடைய தேவி. நரைத்த மாடு வெள்ளை எருது. ஒரு பெண்ணின்மீது ஆசைகொண்டவராக, அவளுடன் நரைத்த எருதேறி வருபவர்மீதோ நீ காதல் கொண்டனை? என்று, தோழி வசந்தவல்லியைத் தடுத்து மாற்ற முயலுகிறாள்.)