பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 63

நஞ்சு பருகி அமுதங் கொடுத்தவர்

எனது வாள்விழி நஞ்சு பருகி அமுதங் கொடுக்கிலார். 2 தேவர் துரைதன் சாபந் தீர்த்தவர்

வன்ன மாங்குயில் சின்னத் துரைதன் சாபந் தீர்க்கிலார் ஏவ ரும்புகழ் திருக்குற் றாலர்தாம்

சகல பேர்க்கும் - இரங்கு வார்எனக் கிரங்கிலார் பெண்ணே. 3 (இணக்குதல் - இணக்கப்படுத்துதல், கையாற் பிசைதல். புரம் - திரிபுரம். பருத்தமலை - பெரிய மகாமேரு பர்வதம். பருவமலை - பருவத்தால் பூரித்து மலைபோல வடிவு பெற்று மதர்த்து விளங்கும் இளைய கொங்கைகள். வாள்விழி நஞ்சு - வாள்போலும் விழியிலே படர்ந்துள்ள நஞ்சாகிய ஏக்கக் கலக்கம். தேவர்துரை தன் சாபம் - தக்கன் யாகத்திலே இந்திரன் பெற்ற சாபம். சின்னம் - திருச்சின்னம். தேவர் துரையின் சாபந்தீர்த்த அவர் இந்தச் சின்னத்துரையின் சாபந்தீர்க்க மாட்டே னென்கிறாரே என்ற ஏக்கம் காண்க.)

27. உன் விருப்பம்போல்! நன்னகரமாகிய நம் திருக்குற்றாலத்திலே, கோவில் கொண்டிருக்கும் ஈசராகிய திருக்குற்றால நாதரின்மேல் நீ ஆசை கொண்டதனால், அதனை மறுத்துக் கூறுபவர் களுக்குத் தக்கபடியெல்லாம் சமாதான வார்த்தைகளைச் சொல்லவும் படித்துக் கொண்டாய். மயில் போலச் சாயல் உடையவளே! அவருடைய சந்நிதியின் சிறப்பையெல்லாம் என்னால் எடுத்துச் சொல்வதற்கும் முடியுமோ? ஏதோ என்னால் ஆனதைச் சொன்னேன். இனி, உனது விருப்பம் எப்படியோ அதன்படியே நடந்து கொள்வாயாக.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் நன்னகர்த் திருக்குற் றால

நாதர்மேல் ஆசை பூண்டு சொன்னவர்க் கிணங்க வார்த்தை

சொல்லவும் படித்துக் கொண்டாய்