பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

பற்றிய குறிகளும், தற்போது கைப் பலனாகச் சம்பவித்துக் கொண்டிருக்கின்ற செய்திகளைப் பற்றிய குறிகளும், அதன்மேல் வருங்காலத்திலே வருவது பற்றிய குறிகளும், மனத்திலே எண்ணியவை, உடலின் குறிப்பால் சொல்லக் கூடியவை, கைரேகைகளினால் அறிந்து கூறக்கூடியவை, கண்களின் குறிப்பினால் அறிந்து சொல்லக்கூடியவை, பேச்சிலேருந்து அறிந்து உரைக்கும் குறி இப்படிப்பட்ட எந்தவகைக் குறியானாலும் இமைப் பொழுதிலே உரைக்க வல்லவளான, மைதீற்றிய கண்களையுடைய குறவஞ்சி யானவள், வசந்தவல்லியின் முன்பாக வந்து அப்போது தோன்றினாள். - கொங்கணம் ஆரியம் குச்சலர் தேசமும் செங்கைமாத் திரைக்கோற் செங்கோல் நடாத்திக் கன்னடம் தெலுங்கு கலிங்கராச் சியமும் தென்னவர் தமிழால் செயத்தம்பம் நாட்டி மன்னவர் தமக்கு வலதுகை நோக்கி 35 இன்னகை மடவார்க்கு இடதுகை பார்த்துக் காலமுன் போங்குறி கைப்பல னாங்குறி மெய்க்குறி கைக்குறி விழிக்குறி மொழிக்குறி எக்குறி யாயினும் இமைப்பினில் உரைக்கும் - மைக்குறி விழிக்குறவஞ்சி வந்தனளே. 40 (இதனால், குறிசொல்பவர் என்னென்ன வகையிலே குறி சொல்லுவார்கள் என்பதனை நன்கு அறியலாம். மைக் குறி விழி - மை தீற்றிய கண், மன்னவர் - ஆண்கள்.)

3. கொஞ்சி வருகிறாள்! வில்லினைப் போன்று விளங்கும் தன் நெற்றியிலே கஸ்தூரிப் பொட்டு இட்டிருந்தாள். நறுமணங் கமழும் கூந்தலிலே வெட்சிப் பூவைச் சூடியிருந்தாள். கொல்லுந் தன்மையுடன் விளங்கிய மதர்த்த கண்களுக்கு மையெழுதி இருந்தாள். கையிலே மாத்திரைக்கோலைப் பிடித்திருந்தாள். இடுப்பிலே மணிக்கூடை விளங்கிற்று. முலை முகங்களிலே குன்றிமணி மாலையினைப் பூண்டிருந்தாள். இப்படியாகத்