பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 77

திரிகூடநாதரின் மலைச்சாரலிலே வாழ்கின்ற பொற்கொடி போன்ற இன்பக்களஞ்சியமான குறவஞ்சியானவள், காலின் சிலம்புகள் கொஞ்சக் கொஞ்ச நடை நடந்து வருவாளா யினாள். -

விருத்தம் சிலைநுதலிற் கஸ்தூரித் திலதமிட்டு நறுங்குழலிற் செச்சைசூடிக் கொலைமதர்க்கண் மையெழுதி மாத்திரைக்கோல்

வாங்கி மணிக்கூடை தாங்கி முலைமுகத்திற் குன்றிமணி வடம்பூண்டு

திரிகூட முதல்வர்சாரல் மலைதனிற் பொன் வஞ்சிகுறவஞ்சியப

ரஞ்சிகொஞ்சி வருகின்றாளே! (சிலைநுதல் - வில்போலும் நெற்றி. நறுங்குழல் - இயல் பாகவே நறுமணமுடைய கூந்தல். அபரஞ்சி - உருக்கி விட்ட தங்கம் போன்ற மேனியாள்.) t

4. குறவஞ்சி வந்தனளே! வஞ்சி வந்தனளே! திருக்குற்றால மலையின் குறவஞ்சி வந்தனளே! வஞ்சிக்கொடி போன்றவள் வார்த்துவிட்ட பொன் போன்ற அழகினையுடையவள், செவ்வரி படர்ந்த விழிகள் என்னும் நஞ்சினையுடையவள் முழுமையும் திண்மை யான நெஞ்சத்தையுடையவள்; குறும்பலாவின் அடியிலே வீற்றிருக்கின்ற அஞ்சு சடைமுடிகளை உடைய, மெய்யுணர் வினனான, பாசங்களின் பற்று அற்றவனைத் தன்.நெஞ்சிலே நீங்காது எண்ணியவள் உண்மையான குறிகளைச் சொல்வதற் காக அந்தக் குறவஞ்சியும் வந்தனளே!

இராகம் - தோடி தாளம் - சாப்பு பல்லவி வஞ்சி வந்தனளே! மலைக்குறவஞ்சி வந்தனளே!

அனுபல்லவி வஞ்சி எழில்அப ரஞ்சி வரிவிழிநஞ்சி

முழுமற நெஞ்சி பலவினில்