பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 81

வட்டமான முலைகளையுடையவரான நங்கையர்க்கு, அவர்கள் மூன்றுலகங்களிலுமுள்ள ஆடவர்களையும் வெற்றி கொள்ளும்படிக்குச் செம்மையான முறையிலே குறிகள் சொல்வதற்காக, 'அம்மே! அம்மே!’ என்று கூவிக் கொண்டே, அவர்களுக்குச் செல்லமான குறவஞ்சியானவள் வந்தாள்.

சோலைகளிலே, வசந்த காலத்திலே இளமையுடைய குயிலினம் வந்தாற்போல, அழகிய மலையினையே வில்லாக வளைத்துக் கொண்ட குற்றாலநாதரின் திருக்குற்றால மலையிலே வாழுகின்ற குறவஞ்சியானவள், கூவியபடியே வந்தாள். -

குறிசொல்லும் கருவியாகிய மாத்திரைக்கோல் கையிலே பொருந்தவும், கண்களின் பார்வையே குறி சொல்லுதலிலே அவளுக்குள்ள ஆற்றலை எடுத்துச் சொல்லவும், கண்டவர் போற்றும் வடிவம் ஒளிவீசவும். பூத்த மலர்க் கொடியானது அப்படியே நடந்துவந்தாற் போல, அந்தக் குறவஞ்சியானவள் வந்தாள்.

இராகம் - தோடி தாளம் - ஆதி பல்லவி வஞ்சி வந்தாள் - மலைக்குற - வஞ்சி வந்தாள்

அனுபல்லவி

வஞ்சி வந்தாள் திரிகூட ரஞ்சித மோகினி முன்னே

மிஞ்சிய விரகநோய்க்குச் சஞ்சீவிமருந்துபோலே (வஞ்சி) மும்மை உலகெங்கும் வெல்லக்

கொம்மைமுலை யார்க்குநல்ல செம்மையா குறிகள் சொல்ல

அம்மே அம்மே என்று செல்ல (வஞ்சி) சோலையில் வசந்த காலம்

வாலகோ கிலம்வந் தாற்போல கோலமலை வில்லியார்குற்

றாலமலை வாழுங் குற - (வஞ்சி)